இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசூகி 2020-ம் ஆண்டுக்குள் எலெக்ட்ரிக் காரினை அறிமுகம் செய்து குறிப்பிட்ட அளவிலான வாடிக்கையாளர்களைக் கவருவது குறித்து ஆராய்ந்து வருகிறது.
2019-ம் ஆண்டின் பிப்ரவரி மாதத்திற்குள் எலெக்ட்ரிக் கார் குறித்த ஆய்வினை முடித்து 2020-ல் மாருதியின் முதல் எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படும் என்பது மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சவால்
எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்வது எளிது என்றாலும் குறைந்த விலையில் எப்படி அளிப்பது என்பது தான் மிகப் பெரிய சவாலாக உள்ளதாக மாருதி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் ஆர் சி பார்கவா கூறினார். எந்த அளவிற்கு வாடிக்கையாளர்கள் எலெக்ட்ரிக் கார்களை விரும்புவார்கள் என்று ஆராய்ந்து வருவதாகவும் கூறினார்.
மத்திய அரசு
குறைந்த விலையில் அனைவரும் வாங்கும் படி எலெக்ட்ரிக் காரினை தயாரித்து விற்பனை செய்ய மத்திய அரசின் தலையீடு வேண்டும் என்றும் அப்போது தான் அதிக வாடிக்கையாளர்கள் கவர முடியும் என்று மாருதி நிறுவனத்தினர் கூறுகின்றனர்.
2030
2030-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 40 சதவீத வாகனங்கள் 40 சதவீதமாக இருக்கும். ஆண்டுக்கு 8 சதவீத வளர்ச்சியுடன் 2030-ம் ஆண்டுக்குள் 71 மில்லியன் வாகனங்கள் விற்பனை செய்ய வாய்ப்புகள் உள்ளது. 14 மில்லியன் கார்கள் முழுமையான எலெக்ட்ரிக் காராகவும், 56.6 மில்லியன் கார்கள் வழக்கமான இஞ்சின்களுடன் ஸ்டிராப் செய்யப்பட்டு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இணைவு
சென்ற மாதம் சுசூகி நிறுவனம் டொயாட்டா நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களைத் தயாரிக்க ஒப்பந்தம் செய்துள்ளது. எலெக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்பட்டபிறகு என்ன மாதிரியான நடவடிக்கைகளை விற்பனை மற்றும் பிற பிறிவுகளில் எடுக்க வேண்டும் என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.
சுசூகி
இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களைச் சுசூகி நிறுவனம் தயாரித்து அதனை டொயோட்டா நிறுவனக்களைக்கு அளிக்க முடிவு செய்துள்ளது. டொயோட்டா நிறுவனம் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் அளிக்க உள்ளது.
மகேந்திரா
இந்தியாவில் ஏற்கனவே சிறிய ரகக் காராக இரண்டு மாடல்களினை மகேந்திரா நிறுவனம் விற்பனை செய்து வருவது மட்டும் அல்லாமல் வெற்றியும் அடைந்துள்ளது. இது மட்டும் இல்லாமல் 2019-ம் ஆண்டில் கூடுதலாக இரண்டு மாடல்களை மகேந்திரா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.
டாடா
டாடா நிறுவனம் தனது தயாரிப்பில் உள்ள நேனோ காரினை எலெக்ட்ரிக் காராக மாற்றி அறிமுகம் செய்வது மட்டும் இல்லாமல் சீடான் கார்களையும் எலெக்ட்ரிக் காராக அறிமுகம் செய்ய உள்ளது.
சியோமி
சீன மொபைல் போன் நிறுவனமான சியோமியும் விரவில் இந்தியாவில் எலெக்ட்ரிக் பைக் போன்ற வாகனங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
டிவிஎஸ் மற்றும் ஹீரோ
டிவிஎஸ் மற்றும் ஹீரோ நிறுவனங்கள் பெங்களூரை சேர்ந்த இரண்டு எலெக்ட்ரிக் பைக் தயாரிக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் முதலீடு செய்ய உள்ளது.
More From GoodReturns

சிலிண்டர் தட்டுப்பாடு: ESMA சட்டத்தை அமல்படுத்திய மத்திய அரசு!! இந்த தப்ப செஞ்சா 7 வருஷம் ஜெயில்!!

துபாய், சவுதி வாழ் இந்தியர்களுக்கு மத்திய அரசின் முக்கிய அறிவிப்பு!! இந்த நம்பரை சேவ் பண்ணிக்கோங்க!!

ஈரான் தாக்குதல்: இந்தியர்களுக்கு பாதுகாப்பான இடம் தர மறுத்ததா இஸ்ரேல்? வைரலாகும் புகைப்படம்

மேற்கு ஆசிய போர் நெருக்கடி: இந்திய அரிசி, எரிசக்தி, ரத்தினங்கள் என 15 துறைகளுக்கு எச்சரிக்கை?

ஈரான் நாட்டின் ராஜதந்திரம்.. கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்கிறாரா டிரம்ப்..?

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!



Click it and Unblock the Notifications