மத்திய அரசுக்கு வரி வருமானமே முக்கிய வருவாய் ஆதாரமாக விளங்குகிறது, குறிப்பாக தனிநபர் வருமானத்தின் மீது மத்திய அரசுக்கு எப்போது ஒரு கண் உள்ளது என்று கூறலாம்.
2015-16 கணக்கீட்டு ஆண்டில் இந்திய மக்கள் தொகையில் வெறும் 2 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
2015-16 கணக்கீட்டு ஆண்டு..
வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையின் படி 2015-16 கணக்கீட்டு ஆண்டில் (2014-15 நிதியாண்டு) 4.05 கோடி மக்கள் வருமான வரி செலுத்தியுள்ளனர்.
இதில் 2.01 கோடி பேர் வரி வரம்புக்கு குறைவான அளவில் வருமானம் பெற்றுள்ளதாக கூறி செலுத்திய வரியை முழுமையாக திரும்ப பெற்றுள்ளனர். ஆக 2.06 கோடி பேர் மட்டுமே வருமான வரி செலுத்தியுள்ளனர். இது மொத்த மக்கள் தொகையில் வெறும் 1.7 சதவீதம் என்பது குறிப்பிடித்தக்கது.
2014-15 கணக்கீட்டு ஆண்டு
இதற்கு முந்தைய ஆண்டில் 3.65 கோடி பேர் வருமான வரி செலுத்தியதில், 1.91 கோடி பேர் மட்டுமே வரி செலுத்தியுள்ளனர்.
1 கோடி ரூபாய் வரி..
2015-16 கணக்கீட்டு ஆண்டில் வருமான வரி செலுத்திய 4.05 கோடி மக்களில், 2.01 கோடி பேர் செலுத்திய வரியை திரும்ப பெற்றுள்ளனர், இதில் 9,690 பேர் செலுத்தப்பட்ட 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகையை வரியாக செலுத்தியுள்ளனர்.
ஓரே ஒருவர் மட்டும் 100 கோடி ரூபாய்க்கும் அதிகமான வருமான வரியை செலுத்தியுள்ளார், இந்நபர் சுமார் 238 கோடி ரூபாயை வரியாக செலுத்தியுள்ளார்.
வரி தொகை..
2014-15 கணக்கீட்டு ஆண்டில் , 1.91 கோடி ரூபாய் வருமான வரியாக வசூல் ஆன நிலையில், 2015-16ஆம் கணக்கீட்டில் ஆண்டில் இதன் மொத்த அளவு குறைந்து 1.88 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.
மொத்த வருமானம்
2015-16 கணக்கீட்டு ஆண்டில் தனிநபர் வருமான வரி வசூல் மூலம் மத்திய அரசுக்கு கிடைத்த மொத்த வருமானத்தின் அளவு 21.27 லட்சம் கோடி ரூபாய்.
நிறுவனம்
இக்காலக்கட்டத்தில் 7.19 நிறுவனங்கள் வருமான வரி தாக்கல் செய்துள்ளது இதன் மூலம் கிடைத்த தொகை 10.71 லட்சம் கோடி ரூபாய் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications