கடுமையான போட்டி, ஒருங்கிணைப்பு மற்றும் நிதி அழுத்தம் உள்ளிட்ட காரணங்களால் சீன டெலிகாம் சாதன உற்பத்தி மற்றும் சேவை நிறுவனமான ஹூவாய் டெக்னாலஜிஸ் இந்திய ஊழியர்களைக் குறைக்க முடிவு செய்துள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.
டெலிகாம் வணிகம் சரிவு, டெலிகாம் நிறுவனங்கள் மூடல் மற்றும் செயல்பாடுகள் மறு ஆய்வு போன்ற காரணங்களால் 2017-ம் ஆண்டில் மட்டும் 30 சதவீத இந்திய ஊழியர்களைக் குறைத்துள்ளது.
ஹூவாய்
ஹூவாய் ஒரு டைனமிக் நிறுவனம் என்றும் எங்களது ஊழியர்களைப் பல வகையில் ஊக்குவிக்கிறோம், அதே நேரம் குறைந்த அளவில் திறன் உடையவர்களை நிறுவனத்தில் வைத்திருப்பதும் முடியாத காரியம் என்று இந்திய ஹூவாய் பிரிவின் மூத்த அதிகாரி தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கூறினார்.
முக்கிய வாடிக்கையாளர்கள்
வோடாபோன் மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைந்ததால் இந்த நிறுவனங்கள் ஹூவாய் நிறுவனத்தின் முக்கிய வாடிக்கையாளர்கள் என்பதாலும் வர்த்தகம் சரிந்து ஊழியர்களை வெளியேற்றியதாகக் கூறப்படுகிறது.
டெலிகாம் நிறுவனங்கள்
அது மட்டும் இல்லாமல் சிறு டெலிகாம் நிறுவனங்களான டெலினார் இந்தியாம் டாடா டெலி சர்வீசஸ் நிறுவனங்கள் ஏர்டெல் நிறுவனத்திற்கு விற்கப்பட்டது, ஆர்காம் நிறுவனம் மூடப்பட்டது, ஏர்செல் நிறுவனம் 6 சர்கிள்களில் சேவை நிறுத்துவது போன்றவையும் ஹூவாய் நிறுவனத்தின் வர்த்தகத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்துகிறது
ஊழியர்கள் எண்ணிக்கை
ஹூவாய் நிறுவனத்தில் 2016 ஆண்டு வரை உலகம் முழுவதும் 1,80,00 ஊழியர்கள் பணிபுரிந்து வந்தனர், உலகின் 9 வது மிகப் பெரிய ஐடி நிறுவனமாகவும் ஃபார்ச்யூன் பட்டியலில் இடம்பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications