2017ஆம் ஆண்டு ஜியோவின் வெற்றியால் அதன் தலைவர் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமம் பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்தது. அதுமட்டும் அல்லாமல் ஜியோ நிறுவனத்தின் அறிமுகம் ஒட்டுமொத்த இந்திய டெலிகாம் துறையையே புரட்டி போட்டது என்றால் மிகையாகாது.
2017ஆம் ஆண்டு ரிலையன்ஸ் நிறுவனத்திற்கும், ஜியோவிற்கும் வெற்றி ஆண்டாக அமைந்தாலும், பிற டெலிகாம் நிறுவனங்களுக்கு மிகவும் மோசமான ஆண்டாக அமைந்தது.
ஆனால் ஜியோவிற்கே அதிர்ச்சி அளித்த நிகழ்வும் 2017இல் நடந்தது.
ஜியோவிற்கு அதிர்ச்சி
ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்பு மக்களின் பேர் ஆதரவுடன் குறைந்த காலகட்டத்திலேயே மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்து சந்தையில் இருக்கும் பிற டெலிகாம் நிறுவனங்களும் அதிர்ச்சி அளித்தது.
கட்டண குறைவு..
ஜியோவுடன் போட்டி போட ஏர்டெல் தனது கட்டணத்தை அதிரடியாகக் குறைந்தது, சந்தையில் இருக்கும் தனது வாடிக்கையாளர்களைத் தனது நெட்வொர்கிலேயே தக்க வைக்கத் தலைகீழ் நின்று தண்ணீர் குடித்தது.
இதில் கணிசமாக வெற்றியும் அடைந்தது. இங்குத் தான் டிவிஸ்டு.
நிதானம்
இந்திய டெலிகாம் சந்தையில் 2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்களான ஐடியா மற்றும் வோடபோன், ஏர்டெல் போல் அல்லாமல் நிதானமாக யோசித்துத் தனது வர்த்தகத்தை வலிமை அடையச் செய்யும் வேலையில் இறங்கியது.
கூட்டணி
2வது மற்றும் 3வது இடத்தில் இருக்கும் ஐடியா மற்றும் வோடபோன் கூட்டணி இணையப்போகிறது என்ற செய்திகள் ஜியோவின் அறிமுகத்திற்குப் பின்பே வெளியானாலும் இரு நிறுவனங்களும் மவுனம் காத்தது.
அறிவிப்பு
ஜியோவின் ஆதிக்கம் சந்தையில் அதிகரிக்கத் துவங்கியுடன் ஏர்டெல் போல் மல்லுக்கட்டி நிற்காமல் ஐடியா மற்றும் வோடபோன் தனது கூட்டணியை அறிவித்தது.
இதில் மிகப்பெரிய அதிர்ச்சி ஜியோவிற்குத் தான்.
போட்டி
தனித்தனியாக இருப்பதால் இலவசம் மற்றும் மலிவான கட்டணத்துடன் அடுத்த 2 வருடத்தில் முதல் இடத்தைப் பிடித்து விடலாம் எனத் திட்டமிட்ட ஜியோ, அந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பால் ஆடிப்போனது.
காப்பி...
இதேபோல் ஏர்டெல், ஆர்காம் என அனைத்து முன்னணி நிறுவனங்களும் வர்த்தகத்தைக் கைப்பற்ற முடிவு செய்து வெற்றியும் கண்டது. ஆனாஸ் ஆர்காம் ஏர்செல் நிறுவனத்தைக் கைப்பற்றும் முயற்சியில் தோற்றுப்போனது குறிப்பிடத்தக்கது.
ஆதிக்கம் சரிவு..
ஏர்டெல் கூட்டணியும், ஐடியா மற்றும் வோடபோன் கூட்டணியும் சந்தையில் வலிமை அடைந்த நிலையில், ஜியோவும் தற்போது கட்டணத்தை உயர்த்தியுள்ளது.
25 பில்லியன் டாலர்
ஐடியா மற்றும் வோடபோன் இணைப்பு அடுத்தச் சில மாதங்களில் முழுமையாக முடியும் தருவாயில் இந்நிறுவனத்தின் மொத்த மதிப்பு 25 பில்லியன் டாலர் அளவை அடையும். இதன் மூலம் மீண்டும் போட்டி ஏர்டெல் உடன் இக்கூட்டணிக்கு இடையில் இருக்கும்.
ஜியோவிற்கு இதைவிடப் பெரிய அதிர்ச்சி 2017இல் இருக்காது.
சேவைத் தரம்..
ஜியோ தனது டெலிகாம் வாடிக்கையாளர்களை வைத்து தனது ரீடைல் வர்த்தகத்தை அதிகரிக்கத் திட்டமிட்டு வருகிறார்.
ஆனால் தற்போது ஜியோ நிறுவனத்தின் தலைவரான முகேஷ் அம்பானி செய்ய வேண்டியது ஜியோவின் சேவை தரத்தை உயர்த்துவதே ஆகும். இல்லையெனில் 2018இல் இந்நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் இழக்க வாய்ப்புகள் உண்டு.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications