83 சதவீத அபராதம்.. ஆடிப்போன கருப்பு பண ஆசாமிகள்..!

பிரதமர் மோடி கருப்புப் பணம் மற்றும் தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டும் என்று 2016 நவம்பர் 8ஆம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை இரவு 12.01மணி முதல் செல்லாது என அறிவித்தார்.

இந்த அறிவிப்பினால் 2016ஆம் ஆண்டில் நவம்பர், டிசம்பர் மட்டும் அல்லாமல் 2017ஆம் ஆண்டு மார்ச் வரையில் இந்தப் பிரச்சனை மக்களை வாட்டி வதைத்தது. இக்காலகட்டத்தில் வருமான வரித்துறை அறிவித்த 83 சதவீத அபராதம் பற்றிய சின்னப் பிளாஷ்பேக்.

வருமான வரித்துறை

வருமான வரித்துறை

பணமதிப்பிழப்பு நடவடிக்கையை வாய்ப்பாகவோ அல்லது இந்த அறிவிப்பை வெற்றிகரமான ஒன்றாக மாற்ற வேண்டும் என்று திட்டமிட்டோ 2016 டிசம்பர் வரையிலான காலத்தில், மக்கள் தங்களது வருமான அறிக்கையில் தாக்கல் செய்யப்பட்ட அளவிற்கு அதிகமான தொகையை வங்கி கணக்கில் வைப்புச் செய்தவர்களைக் கண்டறியத் துவங்கியது.

1.5 லட்சம் பேர்

1.5 லட்சம் பேர்

இதன் படி அதிகமாக வைப்புச் செய்யப்பட்ட 1.5 லட்சம் பேரை பட்டியலிட்டு விசாரணையை அவசர அவசரமாகத் துவங்கியது. இத்தகைய துரித நடவடிக்கை மக்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பு பெற்றாலும், இதன் மூலம் கருப்பு பண ஆசாமிகளைக் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதா என்றால்?

அதற்கான எந்த ஒரு அறிவிப்பும் வருமான வரித்துறை வெளியிடவில்லை.

 

அபராதம்

அபராதம்

வருமான வரித்துறை பட்டியலிட்ட 1.5 பேரின் கணக்குகள் குறித்த விசாரணையில் பதில்கள் வெளிப்படையாக இல்லையெனில் 83 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படலாம் என வருமான வரித்துறை அறிவித்துள்ளது. மேலும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட காலத்தில் கருப்புப் பணம் குறித்து வரித்துறை பதிவு செய்யப்பட்ட வழக்குகளுக்கும் இது பொருந்தும்.

பொதுவாகக் கருப்பு பணத்தின் மீதான அபராத அளவு 35 சதவீதமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. அது என்ன 83 சதவீதம்

 

83 சதவீத அபராதத்தின் கணக்கீடு

83 சதவீத அபராதத்தின் கணக்கீடு

வருமான வரித்துறை சட்டம் 115BBEயின் கீழ் தற்போது 30 சதவீதமாக இருக்கும் வரி விதிப்பு அளவுகள் 60 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இதனைத் தொடர்ந்து 15 சதவீத கூடுதல் கட்டணம் 3 சதவீத செஸ் வரி ஆகியவற்றுடன் சேர்த்து 10 சதவீத அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதன் மூலம் வருமான வரித்துறையில் சிக்கும் தொகையில் 83.25 சதவீதம் வரை அபராதம் செலுத்த வேண்டும்.

 

கருப்புப் பண ஆசாமிகள்

கருப்புப் பண ஆசாமிகள்

மேலும் இக்காலகட்டத்தில் மத்திய அரசும் மோசடியாளர்களுக்கு ஒரு வாய்ப்பை அளித்தது புதிய திட்டத்தையும் உருவாக்கியது.

இத்திட்டத்தின் கீழ் கருப்புப் பணம் வைத்துள்ளவர்கள் தங்களது பணத்தை வைத்து விட்டால் குறைவான அபராதம் மட்டுமே விதிக்கப்படும், இல்லையெனில் 83 சதவீதம் வரையில் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரி மிரட்டியது.

 

மத்திய அரசின் திட்டம்

மத்திய அரசின் திட்டம்

கருப்புப் பணம் அதாவது கணக்கில் காட்டப்படாத பணத்தை 45 சதவீத வரியாக ஒப்படைக்கவும், இதன் மூலம் எவ்விதமான வழக்கம், தண்டனையும் பெறப்படாது என மத்திய அரசு இந்தியாவில் கருப்புப் பணத்தை முழுமையாக ஒழிக்கும் முயற்சியில் Pradhan Mantri Garib Kalyan Yojana (PMGKY) என்ற சிறப்புத் திட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தத் திட்டத்தில் தான் திருச்செங்கோடு தொழிலதிபர் இணைந்துள்ளார்.

 

வரியும்.. வைப்பும்..

வரியும்.. வைப்பும்..

இத்திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்படும் பணத்தில் 50 சதவீதம் வரியாகவும், 25 சதவீத தொகையை ரிசர்வ் வங்கியிடம் 4 வருட வைப்பாக வைக்கப்படும். மீதமுள்ள தொகையைக் கணக்காளரே பயன்படுத்திக்கொள்ளலாம். இதுவே PMGKY திட்டத்தின் கட்டுப்பாடுகள்.

200 பேர்

200 பேர்

பணமதிப்பிழப்பு நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மட்டும் சுமார் 200க்கும் மேற்பட்ட தனிநபர் மற்றும் நிறுவனங்கள் 600 கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை மத்திய அரசின் இச்சிறப்புத் திட்டத்தில் இணைந்துள்ளதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+