விழா காலம் என்பதால் விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு சலுகைகளை வழங்கி வருகின்றன. ஜெட் ஏர்வேஸ், கோஏர், ஸ்பைஸ் ஜெட், ஏர் ஏசியா உள்ளிட்ட நிறுவனங்கள் 1,001 ரூபாய் முதல் விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
எனவே அனைத்து விமான நிறுவனங்களின் சலுகைகளையும் ஒன்றிணைத்து உங்களுக்காக இங்குத் தொகுத்து வழங்கி உள்ளோம்.
ஸ்பைஸ்ஜெட்
ஸ்பைஸ் ஜெட் விமான டிக்கெட்களை நீங்கள் புக் செய்தால் அதே விலை உங்களுக்கு ஸ்பைஸ் ஸ்டைல் இ-காமர்ஸ் இணையதளத்தின் கூப்பன் ஒன்று கிடைக்கும். அந்தக் கூப்பனை பயன்படுத்திப் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம்
இந்த ‘ப்ளை பார் பிரீ' சலுகை மூலமாக 2017 டிசம்பர் 31 வரை spiceJet.com இணையதளத்தில் டிக்கெட் புக் செய்து 2018 மார்ச் 31 வரை பயணம் செய்ய முடியும்.
ஜெட் ஏர்வேஸ்
ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் விமான டிக்கெட்களைக் குறிப்பிட்ட வழித்தடங்களில் 1,001 ரூபாய் முதல் வழங்கி வருகிறது. இந்தச் சலுகை விலையில் 2017 டிசம்பர் 23 முதல் 2018 ஜனவரி 2 வரை டிக்கெட்களைப் புக் செய்யலாம்.
மேலும் எக்கானமி வகுப்பு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 10 சதவீத கட்டண சலுகையும், பிரீமியர் வகுப்பு டிக்கெட் புக் செய்பவர்களுக்கு 15 சதவீத கட்டணம் சலுகையும் 44 வழித்தடங்களில் அளிக்கப்படுகிறது.
கோஏர்
2018-ம் ஆண்டை வரவேற்கும் விதமாக 1,005 ரூபாய் முதல் விமான டிக்கெட்களைக் கோஏர் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த ச்லௌகை விலையில் 2017 டிசம்பர் 2017 வரை கிடைக்கும். 2018 ஜனவரி 10 முதல் 2018 ஜூலை 31 வரை பயணம் செய்ய முடியும். 'GOAPP10' என்ற குறியீட்டை மொபைல் செயலியில் பயன்படுத்திப் புக் செய்யும் போது கூடுதலாக 10 சதவீத சலுகை கிடைக்கும்.
இண்டிகோ
குவுஹாத்தி - பாக்தோக்ரா செல்ல 1,005 ரூபாய் முதல் விமான டிக்கெட்டினை இண்டிகோ நிறுவனம் அளிக்கிறது, கோயம்புத்தூர் - சென்னை செல்ல 1,095 ரூபாயும், சென்னை - பெங்களூரு செல்ல 1,120 ரூபாயும் டிக்கெட்களாக இண்டிகோ நிறுவன இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications