ஒரு பொருளை வாங்குவதற்கே பல யோசனைகளில் மூழ்கும் நிலையில், ஒரு நிறுவனத்தை வாங்குவதிலும் அதனை எப்படிப் பயன்படுத்துவது என்பதில் ஒரு நிறுவனம் எவ்வளவு குழப்பங்கள் இருக்கும்..?
இப்படி 2017ஆம் ஆண்டு உறுதியான முடிவுடன் சில முக்கிய நிறுவனங்கள் மிகப்பெரிய தொகையில் நிறுவனங்களைக் கைப்பற்றியுள்ளது.
டிஸ்னி
டிசம்பர் மாதம் வால்ட் டிஸ்னி நிறுவனம் எக்ஸ்-மேன், அவதார், பென்டாஸ்டிக் போர், டெட்பூல், தி சம்சன், ஸ்டார் இந்தியா, நேஷ்னல் ஜியோகிராபிக் ஆகிய பிராண்டுகளைக் கொண்ட 21வது சென்சூரி பார்ஸ் பிலிம் அண்ட் டெலிவிஷன் ஸ்டூடியோஸ், கேபிள் எண்ட்ர்டெயின்மென், இண்டர்நேஷன்ல் டிவி ஆகியவற்றை 52.4 பில்லியன் டாலர் அளவிலான தொகைக்குக் கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் 13.47 பில்லியன் டாலர் கடனையும் வால்ட் டிஸ்னி ஏற்றுக்கொண்டுள்ளது. இதன் மூலம் மொத்த டீலின் மதிப்பு 66.1 பில்லியன் டாலர் அளவை கொண்டுள்ளது.
ரெனால்ட்ஸ்
பிரிடிஷ் அமெரிக்கன் டோபேக்கோ நிறுவனம் அமெரிக்காவின் முன்னணி புகையிலை நிறுவனமான ரெனால்ட்ஸ் நிறுவனத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது.
ஏற்கனவே ரெனால்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வைத்துள்ள பிரிட்டிஷ் அமெரிக்கன் டோபேக்கோ நிறுவனம், மீதமுள்ள 57.8 சதவீத பங்குகளை 49.4 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றி உலகின் மிகப்பெரிய புகையிலை நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
வோடபோன்-ஐடியா
ஜியோவிற்குப் போட்டியாக இந்தியாவின் 2வது மற்றும் 3ஆம் டெலிகாம் நிறுவனமான வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனத்துடன் இணைந்துள்ளது.
இதன் மூலம் இணைக்கப்பட்ட நிறுவனத்தில் வோடபோன் 45.1 சதவீத பங்குகளை வைத்திருக்கும்.
டாடா டெலிசர்வீசஸ் - பார்தி ஏர்டெல்
புதிய வர்த்தக இல்லாமல் கடனில் மிதக்கும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தின் 41 வட்ட வர்த்தகத்தை முழுமையாகக் கைப்பற்றியுள்ளது பார்தி ஏர்டெல்
அமேசான் - ஹோல்புட்ஸ்
தொடர் உணவு பொருட்களை விற்பனை செய்யும் ஹோல்புட்ஸ் நிறுவனத்தை முழுமையாக அமேசான்.காம் 13.7 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் சிஇஓ அமேசான் கைப்பற்றலுக்கும் இதேபணியில் தொடர்வது மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்படாமல்ல இதே பெயரில் இருக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
டைம்.இன்க்
அமெரிக்காவின் முன்னணி மீடியா நிறுவனமான மீரிடித் கார்ப்ரேஷன் 95 வருட பாரம்பரியம் கொண்ட மேகசின் வெளியீட்டு நிறுவனமான டைம் இன்க் நிறுவனத்தை 2.8 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
கூகிள் - ஹெச்டிசி
தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி மொபைல் தயாரிப்பு நிறுவனமான ஹெச்டிசி நிறுவனத்தைக் கூகிள் 1.1 பில்லியன் டாலருக்குக் கைப்பற்றியது.
வெரிசோன் - யாஹூ
அமெரிக்காவின் முன்னணி வையர்லெஸ் நிறுவனமான வெரிசோன், யாஹூ நிறுவனத்தின் கோர் வர்த்தகத்தையும் ஏஓஎல் பிரான்டு மற்றும் அதன் துணை நிறுவனங்களையும் 4.48 பில்லியன் டாலருக்கு கைப்பற்றி ஒட்டுமொத்த டெக்னாலஜி நிறுவனத்தையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
சிஸ்கோ - பிராட்சாப்ட்
மென்பொருள் நிறுவனமான பிராட்சாப்ட் நிறுவனத்தின் அமெரிக்காவின் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றான சிஸ்கோ 1.9 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.
ரிக்கெட் பென்கைசர் - மீட் ஜான்சன்
பிரிட்டன் நாட்டின் முன்னணி நுகர்வோர் நிறுவனமான ரிக்கெட் பென்கைசர் குழந்தைகளுக்கான பொருட்களைத் தயாரிக்கும் மீட் ஜான்சன் நிறுவனத்தை 16.6 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
உணவு வர்த்தகம்
ரிக்கெட் பென்கைசர் நிறுவனத்தின் உணவு வப்த்தகத்தை அமெரிக்கானி மெக்கார்மிக் அண்ட் கோ நிறுவனம் 4.2 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியுள்ளது.
யூனிலீவர்
ஐரோப்பிய நுகர்வோர் நிறுவனமான யூனிலீவர் நிறுவனம் தனது ஸ்பிரெட் வர்த்தகத்தை அமெரிக்காவின் முன்னணி பங்கு வர்த்தக நிறுவனமான கேகேஆர் நிறுவனத்திற்கு 8.1 பில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது.
ஜான்சன் அண்ட் ஜான்சன்
அமெரிக்காவின் முன்னணி சுகாதார நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுனம் பயோடெக் நிறுவனமான Actelion நிறுவனத்தை 30 பில்லியன் டாலருக்கு கைப்பற்றியது.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications