ஐடி ஊழியர்களின் கனவில் மண்ணை போட்ட கர்நாடகா அரசு.. தமிழ்நாட்டில் என்ன நிலை..!

ஐடி ஊழியர்களின் பணி நீக்கம் அதிகமாக நடந்து வரும் நிலையில் கர்நாடகாவின் ஐடி மற்றும் பிடி அமைச்சரான பிரியங் கார்கே ஐடி ஊழியர்கள் சங்கம் அமைக்கும் திட்டத்தினைக் கர்நாடகா அரசு கைவிடுவதாகத் தெரிவித்துள்ளது.

உலகின் பல முக்கிய ஐடி நிறுவனங்கள் கர்நாடகாவில் உள்ள நிலையில் அதிகப்படியான நபர்களுக்கு வேலை வாய்ப்பும் கிடைத்து வருகிறது. பணி நீக்கம் போன்றவை இருந்தாலும் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது எனவே ஊழியர்கள் சங்கங்கள் அமைக்க அவசியம் இல்லை என்று ஐடி-பிடி துறை செயலாளர் கவுரவ் குப்தா கூறினார்.

இருக்கு ஆன இல்லை

இருக்கு ஆன இல்லை

ஐடி துறையில் தொழிற்சங்கங்களை அனுமதிப்பதற்கான சட்டத்தினைத் திருத்துவதில் அக்கறை உள்ளதாகவும், இது மிகப் பெரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் என்றாலும் கடினமான ஒன்று என்றும் கார்கே கூறியுள்ளார்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்புகளை அதிகளவில் வழங்குவதற்காக இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான ஐன்ஃபோசிஸ், விப்ரோ, கூகுள் போன்றவை தங்களது துறையின் வளர்ச்சிக்காக அதிகளவில் ஊழியர்களைப் பணிக்கும் எடுத்து வருகிறார்கள். அதே நேரம் மிட் லெவல் மற்றும் மூத்த ஊழியர்களைப் பணியில் இருந்து நீக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

 பயிற்சி

பயிற்சி

அதுமட்டும் இல்லாமல் ஐடி நிறுவனங்கள் தங்களது ஊழியர்களுக்கு மீண்டும் பயிற்சி அளிப்பது மற்றும் அவர்களின் திறனை அதிகரிக்கப் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. புதிய தொழில்நுட்பத்தினை ஏற்க முடியாதவர்களை மட்டுமே வெளியேற்றுகின்றன என்கின்றனர்.

ஆட்டோமேஷன்

ஆட்டோமேஷன்

ஊழியர்கள் மற்றும் நிறுவனங்கள் என இரண்டு தரப்பினருக்கும் ஆட்டோமேஷனின் வருகையின் பாதிப்புகள் குறித்துத் தெரியும். அப்படி இருக்கும்பட்சத்தில் ஊழியர்கள் அவர்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறது.

உறுப்பினர்கள்

உறுப்பினர்கள்

எனினும் ஊழியர்கள் சங்கங்கள் ஐடி துறையில் சட்டப்பூர்வமான பாதுகாப்பினை பெற ஏற்கனவே உள்ள தொழிற்சங்கங்களை வைத்து உறுப்பினர்களைச் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

எதிர்பார்ப்பு

எதிர்பார்ப்பு

தொழிலாளர் துறை ஐடி தொழிற்சங்கமாகச் சட்டப்பூர்வமான பாதுகாப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதோடு, தகவல் தொழில்நுட்ப துறையில் பதிவு செய்வதற்குக் கணிசமான எண்ணிக்கையிலான தொழிற்சங்கங்களை அமைக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதாகவும் கூறுகின்றனர்.

சென்னை & புனே

சென்னை & புனே

ஏற்கனவே சென்னை மற்றும் புனே உள்ளிட்ட முக்கிய ஐடி ஹப்புகளில் பல ஊழியர்கள் சங்கங்கள் துவங்கப்பட்டுள்ளன. எனவே கர்நாடகா அரசு அனுமதிக்கவில்லை என்றாலும் ஊழியர்களை உறுப்பினர்களாகப் பதிவு செய்யும் பணிகள் மட்டும் நடைபெற்று வருவதாக ஐடி சங்க பிரதிநிதி ஒருவர் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.

ஐடி ஊழியர்கள்

ஐடி ஊழியர்கள்

டாப் 10 நிறுவனங்கள்

டாப் 10 நிறுவனங்கள்

பட்டதாரிகளுக்கு பெரிய பிரச்சனை..!

பட்டதாரிகளுக்கு பெரிய பிரச்சனை..!

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+