ஜனவரி முதல் ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு போட்டியாக வோடபோனின் புதிய சேவை!
வோடாபோன் இந்தியா நிறுவனம் 2018 ஜனவரி முதல் வோல்ட்இ (VoLTE) சேவையினை அறிமுகம் செய்ய உள்ளது.
வோல்ட்இ என்றால் ஒரே நேரத்தில் குரல் மற்றும் தரவை கடத்தும் நுட்பமாகும். இந்தத் தொழில்னுட்பத்தின் மூலம் எல்டிஈ போனைத் தொடர்புகொள்ளும் போதும் தரவு தொடர்ந்து இயக்கப்படும்.

வோடாபோன் நிறுவனம் தனது வோல்ட்இ சேவையினை முதற்கட்டமாக மும்பை, குஜராத், டெல்லி, கர்நாடகா மற்றும் கொல்கொத்தா உள்ளிட்ட இடங்களில் அளிக்க இருப்பதாகவும், பின்னர் நாடு முழுவதும் சேவை அளிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதன் முதலாக ஜியோ நிறுவனம் தான் வோல்ட்இ சேவையினை அறிமுகம் செய்தது. அன்மையில் ஏர்டெல் நிறுவனம் சென்னை உள்ளிட்ட சில நகரங்களில் தங்களது வோல்ட்இ சேவையினை அளிக்கத் துவங்கியுள்ளது.


Click it and Unblock the Notifications