வோக்ஸ்வாகன் இந்தியா நிறுவனம் தனது இணையதளத்தில் உங்களைக் கண்டிப்பாகக் கார் வாங்க வைக்கக் கூடிய ஒரு ஆஃபரினை அறிவித்துள்ளது. இணையதளத்தில் உள்ள விளம்பரத்தில் இப்போது காரினை அர்டர் செய்து 2019-ம் ஆண்டுப் பணத்தினைச் செலுத்துங்கள் என்று கூறியுள்ளது.
எனவே தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளம் சென்னையில் உள்ள ஒரு வோக்ஸ்வாகன் டீலரினை தொடர்புகொண்டு கேட்ட போது நமக்கும் புரியும் படி விளக்கம் அளித்துள்ளார். அதனை இங்குப் பார்க்கலாம்.
ஆஃபர்
வோக்ஸ்வாகன் நிறுவனம் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு உண்மை தான் என்றும், வோக்ஸ்வாகன் வென்டோ காரை 2017 டிசம்பர் மாதத்திற்குள் புக் செய்து முதல் ஈஎம்ஐயினை 2019-ம் முதல் செலுத்தலாம் என்று தெரிவித்தனர்.
வாகன கடன் வட்டி விகிதம்
ஆஃபர் குறித்த விவரங்களைப் பார்க்கும் முன்பு தவனை முறையில் கார் வாங்க விரும்புபவர்களுக்குத் தான் இந்த ஆஃபர் என்பதை நினைவில் கொள்ளவும். தவனை முறையில் கார் வாங்கும் போது கடன் பெறும் தொகையின் மீது 9.45% முதல் 13.50 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. அது மட்டும் இல்லாமல் செயல்பாட்டுக் கட்டணமாக 3,220 ரூபாய் முதல் 5870 ரூபாய் வரை செலுத்த வேண்டி வரும்.
காரின் விலை
சென்னையில் வோக்ஸ்வாகன் வென்டோ காரின் 8.19 லட்சம் ரூபாய் முதல் 13.87 லட்சம் ரூபாய் வரை பலதரப்பட்ட அம்சங்களுடன் விற்பனை செய்யப்படுகிறது.
எப்படிச் சலுகை விலையில் கார் வாங்குவது?
வோக்ஸ்வாகன் வென்டோ காரின் ஷோரூம் விலையில் 20 சதவீதம் மற்றும் ஆர்டிஓ கட்டணம் மற்றும் இன்சூரன்ஸ் கட்டணத்தினைச் செலுத்தி முதலில் புக் செய்ய வேண்டும்.
ஈஎம்ஐ மற்றும் சிபில் ஸ்கோர்
மீதம் 80 சதவீத தொகையினை மாத தவணையில் ஈஎம்ஐ மூலமாக 2019-ம் ஆண்டு முதல் செலுத்தினால் போதும் என்று கூறியுள்ளனர். அதே நேரம் இந்தச் சலுகையினைப் பெற உங்கள் சிபில் ஸ்கோர் அதிகமாக இருந்தால் தான் வங்கிகள் கடன் அளிக்கும்.
போட்டி
ஹோண்டாட் சிட்டி, ஹோண்டா வெர்னா மற்றும் ஸ்கோடா ரேபிட் கார்களுக்குப் போட்டியாக வோக்ஸ்வாகன் வென்டோ கார் இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையாகவும் இந்தக் கார் கிடைக்கிறது.
முந்துங்கள்
2017-ம் ஆண்டின் இறுதிக்குள் கார் வாங்க வேண்டும் என்று திட்டமிட்டவர்கள் வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் இந்த ஆஃபரில் காரை வாங்கிப் பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு உங்கள் வோக்ஸ்வாகன் கார் விற்பனையாளரை அணுகுக.


Click it and Unblock the Notifications