வெளிநாட்டவர்களைச் சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் அதிகளவில் ஈர்க்க முக்கியக் காரணமாக அமைந்த வரியில்லா வாழ்க்கை முறை 2017ஆம் ஆண்டு உடன் முடியப்போகிறது.
வளைகுடா நாடுகளில் கட்டுமான ஊழியர்கள் முதல் சாப்ட்வேர் வல்லுனர்கள் வரையில் அனைத்து தரப்பிரனும் வாழ்ந்தும் பணியாற்றியும் வருகின்றனர். இதில் அதிகமானோர் இந்தியர்கள் என்றால் மிகையாகாது. இப்படிச் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் இந்திய மக்கள் இதுவரை அனுபவித்து வந்த வரியில்லா வாழ்க்கை முறை இனி இருக்காது.
2018 முதல்..
பொதுவாக வளைகுடா நாடுகள் அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தியை மட்டுமே நம்பி வர்த்தகம் செய்யும் நிலையில், கடந்த சில மாதங்களாக இதன் விலை அதிகளவில் குறைந்து அரசின் வருவாய் அளவுகளைத் தடுமாறச் செய்தது.
இத்தகைய சூழ்நிலையில், சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகள் 2018 முதல் அனைத்துச் சரக்கு மற்றும் சேவையின் மீதும் 5 சதவீம் வாட் வரி அதாவது மதிப்பு கூட்டு வரி விதிக்க உள்ளது.
எந்தப் பொருட்களுக்கு..
இந்தியாவில் ஜிஎஸ்டி வரியின் கீழ் இருக்கும் அனைத்துப் பொருட்களுக்கும் வாட் வரி பொருந்தும். பெட்ரோல், டீசல் உட்பட...
2018ஆம் ஆண்டு முதல் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் மக்கள் வாங்கும் உணவு, ஆடைகள், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், எரிபொருள், டெலிகாம் சேவைகள், மின்சாரக் கட்டணம், ஹோட்டல் புக்கிங் என அனைத்திலும் இந்த மதிப்பு கூட்டு வரி அமலாக்கம் செய்யப்பட உள்ளது.
விலை அதிகம்..
பொதுவாகத் துபாய் போன்ற பெரு நகரத்தில் அனைத்துச் சேவை கட்டணங்களும் அதிகமாக இருக்கும் நிலையில் 5 சதவீத வாட் வரி என்பது கூடுதல் சுமையாக இருக்கும் எனச் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் வாழும் பல இந்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
வரி விலக்கு
சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளின் அரசுகள் இந்த வாட் வரி அமலாக்கத்தில் சிலவற்றுக்கு மட்டும் வரி விலக்கு அளித்துள்ளனர்.
இதில் முக்கியமான வீட்டு வாடகை, ரியல் எஸ்டேட் விற்பனை, சில மருத்து சிகிச்சைக்கு, விமான டிக்கெட்க்கு, பள்ளி கட்டணங்கள் ஆகியவற்றுக்கு முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
உயர் கல்வி
பள்ளிக்கல்வி கட்டணத்திற்கு வரி விலக்கு அளிக்கப்பட்டாலும், குழந்தைகளுக்கு அளிக்கப்படும் சீருடை, புத்தகம், பள்ளி வாகனம் கட்டணம், உணவு ஆகியவற்றுக்கு வரி உண்டு.
அதேபோல் உயர் கல்விக்கு வரி உண்டு.
தரகு கட்டணம்
ரியல் எஸ்டேட் துறையில் சொத்துக்களை வாங்குபவருக்கும், விற்பவருக்கும் மத்தியில் இருக்கும் தரகர்கள் பெறும் கட்டணத்திற்கும் வாட் வரி பொருந்தும்.
பிற நாடுகள்
சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளைத் தவிரப் பிற வளைகுடா நாடுகள் தங்களுக்கான பிரத்தியேக வாட் வரியை நிர்ணயம் செய்ய உள்ளதாகவும், இது அடுத்தச் சில மாதங்களில் அமலாக்கம் செய்யப்பட உள்ளதாகவும் தெரிகிறது.
சரக்கு இருப்பு
2018 முதல் அனைத்துச் சரக்குகளுக்கும் வாட் வரி விதிக்கப்படும் நிலையில் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருக்கும் அனைத்து விற்பனையாளர்களும் விற்பனை பொருட்களின் இருப்பை அதிகரித்து வருகின்றனர்.
குறைவான வரி
ஐரோப்பிய நாடுகளில் 20 சதவீதம் வரையில் வாட் வரி விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் சவுதி அரபியா மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் விதிக்கப்படும் 5 சதவீத வரிச் சற்றுக் குறைவானதே.
இலக்கு
கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் ஏற்பட்ட இழப்பை ஈடு செய்யும் நிலையில், ஐக்கிய அரபு நாடுகள் வரி வசூல் மூலம் 12 பில்லியன் திர்ஹாம் வரையில் வசூல் செய்ய முடிவு செய்துள்ளது.
சவுதி அரேபியா
2018ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையைச் சவுதி அரேபியா இத்தகைய நிதி நெருக்கடியான சூழ்நிலையிலும் வரலாறு காணாத அளவிற்கு 261 பில்லியன் டாலர் மதிப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications