இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்தின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தும் முதற்கட்ட முயற்சியாக மத்திய அரசின் ஸ்மார்ட்சிட்டி அமைக்கும் திட்டம், இந்திய ரியல் எஸ்டேட் துறைக்கு ஜாக்பாட் என்றே சொல்லாம்.
இத்திட்டம் முழுமையடையச் சிலபல வருடங்கள் ஆனாலும் இதில் கிடைக்கும் வளர்ச்சி மற்றும் வர்த்தகம் மிகவும் பெரியது. இப்படி 2017இல் ஜகஜோதியாக விளங்கிய ரியல் எஸ்டேட் துறையில் ஒரு குண்டு விழுந்தது.
ஆம், RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்தின் மூலம் ரியல் எஸ்டேட் துறையில் வீடு மற்றும் பிளாட் விற்பனை எண்ணிக்கை அதிகளவில் குறைந்தது மட்டுமல்லாமல் பல்வேறு நிதி சிக்கலிலும், குழப்பத்திலும் டெவலப்பர் நிறுவனங்கள் மூழ்கியது.
இத்தகைய சூழ்நிலையில் 2018ஆம் ஆண்டில் புதிய வீடு வாங்கலாமா..?
ஜிஎஸ்டி..
RERA மற்றும் ஜிஎஸ்டி அமலாக்கத்திற்குப் பின் கட்டிமுடிக்கப்பட்ட வீடுகள் விற்பனை ஆகாமல் இதன் எண்ணிக்கை இந்தியா முழுவதும் தாறுமாறாக உயர்ந்துள்ளது.
இதனால் கட்டுமான நிறுவனங்களும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சில வாரங்களாக ஜிஎஸ்டி, RERA பிரச்சனைகள் இத்துறை நிறுவனங்கள் மத்தியில் குறைந்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.
அரசு கெடுபிடி
இந்நிலையில் அரசு கட்டிமுடிக்கப்பட்டு நிறுவனத்தின் கையில் இருக்கும் வீடுகளுக்கும் வரி செலுத்த வேண்டும், இதன் வாயிலாக டெவலப்பர்கள் செய்யும் மோசடிகள் அதிகளவில் களைய முடியும் என மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டது.
எல்லோருக்கும் வீடு
அனைத்தையும் தாண்டி மத்திய அரசு அறிவித்துள்ள அனைவருக்கும் வீடு என்ற மலிவான வீட்டுத் திட்டம் ரியல் எஸ்டேட் துறைக்கு மிகப்பெரிய வர்த்தகப் பிரிவாகத் தற்போது உயர்ந்துள்ளது.
இத்திட்டத்தில் வீடு கட்டுபவர்களுக்கும் சரி, வீடு வாங்குபவர்களுக்கும் சரி அதிகளவிலான சலுகை கிடைக்கிறது.
விலை மாற்றம்..
இத்தகைய சூழ்நிலையில் 2018ஆம் ஆண்டு வீடு வாங்கலாமா என்று நீங்கள் கேட்டால் கண்டிப்பாக வாங்கலாம். ஆனால் சில முக்கியமான விஷயங்களை நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
எல்லோருக்கும் வீடு என்ற பிரிவில் உள்ள மலிவான வீடுகளுக்குத் தற்போது தேவை அதிகமாக உள்ளது, அதேபோல் வீடுகளின் எண்ணிக்கையும் குறைவாக இருக்கும் காரணத்தால் இப்பிரிவில் இருக்கும் வீடுகளின் விலை குறைய வாய்ப்புகள் மிகவும் குறைவு.
சாதாரண வீடுகள்
ஆனால் மலிவான வீடுகளைத் தாண்டி சாதாரண வீடுகள் பிரிவில் அரசு கெடுபிடி மற்றும் பல்வேறு சிக்கல்கள், வரிப் பிரச்சனையில் மூழ்கியுள்ள ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தற்போது வீடுகளுக்கு அதிகளவிலான சலுகையை அளித்து வருகிறது.
இப்பரிவில் இருக்கும் வீடுகள் விலை குறைவாகக் கிடைத்தால் கண்டிப்பாக நீங்கள் வாங்கலாம்.
வீட்டுக்கடன்
மேலும் வங்கிகளில் தற்போது வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் அதிகளவில் குறைந்துள்ளதால் மக்களுக்கு இது சரியான வாய்ப்பு.
இதுமட்டும் அல்லாமல் சந்தை நிலவரத்தின் படி வீட்டுக் கடன் விகிதங்கள் தற்போது நிலைப்பெற்று உள்ளது. இது கூடுதலாகக் குறைய வாய்ப்பு இல்லை, எனவே வீடு வாங்கத் திட்டமிடுவோர் வீடு வாங்க இதுவே சரியான நேரம்.
ஹாட்டான பிரிவு..
மத்திய அரசுக்கும் சரி, ரியல் எஸ்டேட் மற்றும் வங்கிகளுக்கும் அமைப்புகளுக்கும் சரி தற்போது மிகப்பெரிய இலக்காகக் கொண்டு இருப்பது மலிவான வீடுகள் பிரிவுதான்.
இதுவே நாட்டின் வளர்ச்சியும், உள்கட்டமைப்பையும் அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்லும் என மத்திய அரசு நம்புகிறது.
முதலீடு
மேலும் ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்ய விரும்புவோர் ஸ்மார்ட் சிட்டி வரும் இடத்தில் முதலீடு செய்தால் கண்டிப்பாக லாபம் கிடைக்கும் எனப் பல்வேறு ஆய்வுகள் கூறுகிறது.
முதல இதைப் படிங்க..!
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?



Click it and Unblock the Notifications