2014 முதல் 4.5 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டு குடியுரிமை பெற்றுள்ளார்கள்..!

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: 2014-ம் ஆண்டு முதல் உலகின் 117 நாடுகளில் 4.5 லட்சம் இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் இந்தியர்களுக்கு அதுவும் ஐடி ஊழியர்கள் பலருக்கு வெளிநாட்டில் சென்று செட்டில் ஆக வேண்டும் என்ற உண்டு. அப்படி 2014-ம் ஆண்டு முதல் தற்போது வரை எவ்வளவு நபர்கள் இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளார்கள் என்று இங்குப் பார்க்கலாம்.

இந்தியர்கள்

இந்தியர்கள்

மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதில் அளித்த மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி கே சிங் 2015-ம் ஆண்டு 42,213 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்று இருந்ததாகவும், இதுவே 2016-ம் ஆண்டு 46,188 ஆக அதிகரித்துள்ளது என்றும் தெரிவித்தார்.

வெளிநாட்டுக் குடியுரிமை

வெளிநாட்டுக் குடியுரிமை

2014-ம் ஆண்டு முதல் 2017 ஆண்டு வரை 117 நாடுகளில் 4,52,109 இந்தியர்கள் வெளிநாட்டுக் குடியுரிமை பெற்றுள்ளதாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் தகவல்கள் கூறுகின்றன.

அமெரிக்கா

அமெரிக்கா

2016-ம் ஆண்டு அமெரிக்க அரசு வெளியிட்ட தகவலின் படி 10,298 இந்தியர்கள் கலிபோர்னியாவிலும், 5,312 இந்தியர்கள் நியூ ஜெர்சியுலும், டெக்சாசிஸ் 4,670 நபர்களும், நியூ யார்க்கில் 2,954 நபர்களும் குடியுரிமை பெற்றுள்ளதாகத் தெரிவித்துள்ளனர்.

செவிலியர்கள்
 

செவிலியர்கள்

மற்றொரு கேள்விக்குப் பதிலளித்த அமைச்சர், குடியேற்ற அனுமதி பெற்ற பின்னர் 4,052 இந்திய செவிலியர்கள் வெளிநாட்டிற்குச் சென்றுள்ளனர் என்றும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Over 4.5 lakh Indians acquired foreign citizenship since 2014: Government

Over 4.5 lakh Indians acquired foreign citizenship since 2014: Government
Story first published: Wednesday, December 27, 2017, 19:49 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X