டெலிகாம் வணிகத்தினை விட்டு மொத்தமாக வெளியேறும் முடிவில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ்.
மும்பை: ரிசர்வ் வங்கியின் கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் அனைத்துக் கடனையும் செலுத்திவிட்டு கடன் இல்லாத நிறுவனமாக ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தினை மாற்றப் பல முக்கிய முடிவுகளை அனில் அம்பானியின் தலைமையிலான ஆர்காம் நிறுவனம் எடுத்துள்ள நிலையில் நிறுவனத்தின் பங்குகள் இரண்டு நாட்களில் 50 சதவீதம் வரை லாபம் அளித்துள்ளது.
ஆர்காம் எடுத்துள்ள புதிய முடிவினை அடுத்து மொத்த கடன் மதிப்பில் 85 சதவீதம் வரை சரிந்து வெறும் 6000 கோடி ரூபாய் மட்டுமே கடன் இருக்கும்.
பங்கு சந்தை
மும்பை பங்கு சந்தையில் செவ்வாய்க்கிழமை முடிவில் 30 சதவீத லாபத்தினை ஆர்காம் நிறுவனம் அளித்தது. இன்று புதன்கிழமை பிற்பகல் 12:07 மணி நிலவரத்தின் படி 23.53 சதவீதம் வரை ஆர்காம் நிறுவனப் பங்குகளின் விலை உயர்ந்து ஒரு பங்கின் விலை 26.35 ரூபாயாக உள்ளது.
சொத்துக்கள் விற்பனை
ஆர்காம் நிறுவனம் அதன் டெலிகாம் சொத்துக்களான ஸ்பெக்டர்ம், டவர் மற்றும் ஃபைபர் சேவைகளை 2018 மார்ச் மாதத்திற்குள் விற்று 25,000 கோடி ரூபாயினைச் செலுத்த முடிவு செய்துள்ளது என்று அனில் அம்பானி தெரிவித்துள்ளார். இதன் மூலம் சீன வங்கியிடம் இருந்து பெற்ற கடன் அனைத்தும் ஒப்படைக்கப்படும் என்று தெரிகிறது.
திருபாய் அம்பானி சிட்டி
பின்னர் ஆர்காம் கட்டுப்பாட்டில் உள்ள திருபாய் அம்பானி சிட்டி மற்றும் பிற சொத்துக்களை விற்று மீதம் உள்ள 14,000 கோடி ரூபாயினை அடைக்க முடிவு எடுத்துள்ளது. இதன் முடிவில் ஆர்காம் வசம் 6,000 கோடி ரூபாய் மட்டுமே கடன் இருக்கும்.
ஜியோ
அனில் அம்பானியின் இந்த முடிவை வைத்துப் பார்க்கும் போது ஆர்காம் நிறுவனம் டெலிகாம் வணிகத்தினை விட்டு முழுமையாக வெளியேறிவிடும் என்று கூறப்படுகிறது. ஆர்காம் நிறுவனத்தின் ஸ்பெக்டர்ம்களை ஜியோ நிறுவனம் கைப்பற்றும் திட்டத்தில் உள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!



Click it and Unblock the Notifications