இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானி தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் வளர்ச்சி 2017ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே அட்டகாசமாக இருந்தது.
இதனால் இவரது சொத்து மதிப்பு பல பில்லியன் டாலர் வரையில் உயர்ந்து ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராகவும் சில நாட்கள் இருந்தார்.
அப்படி 2009க்குப் பின் என்ன நடந்தது..?
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்
ரிலையன்ஸ் 2002ஆம் ஆண்டு முதல் முறையாகப் பங்குச்சந்தையில் களமிறங்கியது, இந்நிறவனத்தின் வர்த்தகம் மற்றும் முதலீடுகள் தொடர்ந்து அதிகரித்து லாபம் உச்சத்தைத் தொட்ட காரணத்தால் 2007ஆம் ஆண்டில் 126.80 சதவீதம் வரையில் இந்நிறுவனப் பங்குகள் உயர்ந்தது.
அதன் பின் அடுத்த வருடமே 57.30 சதவீதம் வரையில் சரிந்து முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளித்தது.
2009ஆம் ஆண்டு
விடா முயற்சியுடன் போராடிய முகேஷ் அம்பானி மற்றும் நிர்வாகக் குழு 2009ஆம் செய்யப்பட்ட முக்கியத் திட்டங்களால் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் மீதான நம்பிக்கை அதிகரித்து இதன் பங்கு மதிப்பு மீண்டும் உயர்ந்தது.
இதன் மூலம் 2009ஆம் ஆண்டில் சுமார் 77.10 சதவீதம் வரையிலான பங்கு மதிப்பு உயர்வை ரிலையன்ஸ் சந்தித்தது.
இடைப்பட்ட காலம்
2010 முதல் 2016 வரையிலான காலத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் வருவாய் அளவீடுகள் பெரிய அளவிலான உயர்வு காணவில்லை, இதுமட்டும் அல்லாமல் பல முக்கியக் காரணங்களால் இந்த இடைப்பட்ட காலத்தில் பல ஏற்ற இறக்கங்களைச் சந்தித்தது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்.
ஜியோவின் அறிமுகம்
2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தனது டெலிகாம் சேவையான ஜியோவை அறிமுகம் செய்து முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பெற்றார் முகேஷ் அம்பானி. இதனால் 2016ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் குழுமம் பங்குகள் 6.67 சதவீதம் வரையிலான உயர்வை அடைந்தது.
ஒரு வருட அசுர வளர்ச்சி
ஜியோவின் அறிமுகத்தின் வெற்றி முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய நம்பிக்கையை அளித்ததற்குச் சான்றாக 2017ஆம் ஆண்டில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள் சுமார் 70.78 சதவீதம் வரையில் உயர்ந்தது.
முகேஷ் அம்பானியை மகிழ்ச்சியின் உச்சத்திற்குக் கொண்டு சென்றது.
பங்கு விலை
2017ஆம் ஆண்டில் ஜனவரி 2017இல் வெறும் 507.95 ரூபாயாக இருந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனப் பங்குகள், இந்த வருடம் அதிகப்படியாக 952.55 ரூபாய் என்ற உயர்வான நிலையை அடைந்தது.
கணிப்புகள்
இந்நிலையில் 2018ஆம் ஆண்டு இந்நிறுவனத்தின் பங்கு மதிப்பு 1,250 ரூபாய் வரையில் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என ஐஐஎப்எல் நிறுவனம் தனது கணிப்புகளை வெளியிட்டுள்ளது.
2 மடங்கு வளர்ச்சி
More From GoodReturns

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

தங்கம் தந்த டபுள் சர்ப்பிரைஸ்: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை..!! இனி ஒவ்வொரு நாளும் முக்கியம்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

குறைந்த உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு! பல மடங்கு எகிறிய கிருத்திகாவின் சொத்து - பின்னணி என்ன?

அட்சய திருதியைக்கு தங்கம் வாங்குற பிளான் இருக்கா? இப்படி செஞ்சா குறைஞ்ச விலைக்கு தங்கம் கிடைக்கும்



Click it and Unblock the Notifications