இறுதி ஜிஎஸ்டிஆர் தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியை மத்திய அரசு 10 நாட்கள் வரை நீட்டித்து ஜனவரி 10-ம் தேதிக்குள் செய்ய வேண்டும் என்று அறிவித்துள்ளது.
இதனால் ஜிஎஸ்டிஆர் 1-ஐ தாக்கல் செய்வதற்கான கடைசித் தேதியாக இருந்த 2017 டிசம்பர் 31 என்பது 2018 ஜனவரி 10 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஜூலை முதல் நவம்பர்
2017 ஜூலை முதல் செப்டம்பர் வரையில் 1.5 கோடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ள நிறுவனங்கள் மற்றும் ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை ஓவ்வொரு மாதமும் 1.5 கொடிக்கும் அதிகமாக வருவாய் ஈட்டிய நிறுவனங்கள் ஜனவரி 10 தேதிக்குள் ஜிஎஸ்டிஆர்-1ஐ தாக்கல் செய்ய வேண்டும்.
அக்டோபர் முதல் டிசம்பர்
2017 அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான ஜிஎஸ்டிஆர்-1 விற்பனை வரியினைத் தாக்கல் செய்யக் கடைசி 2018 பிப்ரவரி 15ம் தேதி என இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
டிசம்பர்
அதே போன்று மாதம் 1.50 கோடி ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்கள் டிசம்பர் மாதத்திற்கான ஜிஎஸ்டிஆர்-1ஐ 2018 பிப்ரவரி 10-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும்.
வருமான வரி கட்ட வேண்டாம்..!


Click it and Unblock the Notifications