2016-17ஆம் நிதியாண்டில் நாட்டின் வகைப்படுத்தப்பட்ட துறையில், ஒரு நாளுக்கு 1,100 வேலைவாய்ப்பு எனச் சுமார் 4.16 லட்ச வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2015-16ஆம் நிதியாண்டை விடவும் 2 சதவீதம் அதிகம் என வேலைவாய்ப்பு அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
பணமதிப்பிழப்பால் வேலைவாய்ப்பு சந்தை அதிகளவில் பாதிக்கப்பட்ட நிலையில்,2016-17ஆம் நிதியாண்டின் கடைசிக் காலாண்டில் அதிகளவிலான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் ஜனவரி - மார்ச் 2017 காலகட்டத்தில் மொத்த வேலைவாய்ப்புகளில் 45 சதவீதம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் 50 சதவீதம் வகைப்படுத்தப்பட்ட துறையில் சார்ந்து உள்ளது.
ஆனால் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், வகைப்படுத்தப்பட்ட துறை மட்டுமே கணக்கில் கொள்ளப்பட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் பணமதிப்பிழப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட வகைப்படுத்தப்படாத துறை என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications