இந்தியாவில் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் மக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், நிறுவனங்களால் தொடர்ந்து வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.
இதன் காரணமாக நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்கள் தற்போது புதிய முயற்சியில் இறங்கியுள்ளது. இதுதான் 2018ஆம் ஆண்டில் இந்நிறுவனத்தின் நிலையை முற்றிலும் மாற்றப் போகிறது
சொந்த பிராண்டுகள்
ஈகாமர்ஸ் துறையில் வாடிக்கையாளர்களைத் தக்கவைத்துக்கொள்ள முதலில் அவர்களது நம்பிக்கையை வளர்க்க வேண்டும். இதன் காரணமாக ஈகாமர்ஸ் நிறுவனங்கள் ஒவ்வொரு பிரிவிலும் தனக்கெடு ஒரு பிரத்தியேக பிராண்டை உருவாக்கி வாடிக்கையாளர்களுக்குச் சிறப்பான சேவை அளிக்க இது மிகப்பெரிய அளவில் உதவும்.
முதலீடு
ஒவ்வொரு பிரிவிலும் தரமான பொருட்களை ஈகாமர்ஸ் நிறுவனம் உருவாக்கும் பிராண்டின் கீழ் தயாரிக்கப்பட்டு வர்த்தகச் சந்தைக்குக் கொண்டு வர முடிவு செய்துள்ளது.
இதற்காக அதிகளவில் முதலீடு செய்ய நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது.
பொருட்களின் தரம்
ஈகாரமஸ் நிறுவனத்தின் தர குறைவான பொருட்கள், போலியான பொருட்கள், தரக் குறைவால் பொருட்களில் ஏற்படும் சேதம் எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வருகிறது.
பிராண்டு
இவை அனைத்திற்கும், முற்றுப்புள்ளி வைக்கும் இப்புதிய திட்டம் பயன்படும் என ஈகாமர்ஸ் நிறுவனங்கள் நம்புகிறது.
மேலும் இத்திட்டத்தின் மூலம் ஈகாமர்ஸ் நிறுவனங்களுக்கு அதிகளவிலான லாபமும் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications