விரைவில் ஏடிஎம் பண பரிவர்த்தனை கட்டணங்கள் உயர வாய்ப்பு..!

என்ன தான் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யச் சொன்னாலும் நகரங்களைத் தவிர வேறு எங்கும் இது எடுபட வாய்ப்புள்ளை என்ற நிலை தான் இந்தியாவில் தற்போது உள்ளது. அதனால் பலரும் இப்போது வரையில் ஏடிஎம்-ஐ நாடுவது நடந்துகொண்டு தான் இருக்கிறது.

ஆனால் விரவில் ஏடிஎம் பணப் பரிவர்த்தனை கட்டணங்கள் உயர வாய்ப்புள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள செய்திகள் தெரிவிக்கின்றன.

கோரிக்கை

கோரிக்கை

வங்கிகளுக்கு இடையிலான ஏடிஎம் பரிவர்த்தனை கட்டணத்தினை உயர்த்த வேண்டும் என்று ஏடிஎம் ஆப்ரேட்டர்கள் மற்றும் தனியார் வங்கி நிறுவனங்கள் பல மாதங்களாகக் கோரிக்கை வைத்து வருகின்றன.

காரணம்

காரணம்

பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு ஏடிஎம் பயன்படுத்துவது குறைந்து வருவதால் வங்கிகளுக்குக் கூடுதல் செலவாகிறது என்றும் இதனால் இண்டர் பாங்க்கிங் கட்டணத்தினை உயர்த்த வேண்டும் என்று தேதியை பணப் பரிவர்த்தனை கார்ப்ரேஷன் உடனான கூட்டத்தில் கோரிக்கை வைக்கப்பட்டு இருக்கிறது.

பொதுத் துறை வங்கிகள்

பொதுத் துறை வங்கிகள்

இலவச பரிவர்த்தனைகளுக்கு வங்கிகளே கட்டணம் செலுத்து வருவதால் தனியார் வங்கி நிறுவனங்கள் இந்தக் கோரிக்கையினை வைத்தாலும் முக்கியப் பொதுத் துறை வங்கிகள் தங்களுக்கு இது கூடுதல் செலவை ஏற்படுத்தும் என இதனை எதிர்த்து வருகின்றன.

வங்கிகளுக்கு இடையிலான பரிவர்த்தனை கட்டணமானது ஏற்கனவே அதிகமாக உள்ளது இதனை உயர்த்தினால் மிகப் பெரிய பின்னடைவு ஏற்படும் என்று பொதுத் துறை வங்கிகள் கூறுகின்றன.

 

 தனியார் துறை வங்கிகள்

தனியார் துறை வங்கிகள்

பாதுகாப்புச் செலவுகள், புதிய நோட்டுகள் அறிமுகத்தால் இயந்திரங்களுக்காக ஏற்பட்ட கூடுதல் செலவு அதிகமாக உள்ளது எனத் தனியார் துறை வங்கிகள் கூறுகின்றன.

வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள்

கட்டணத்தினை உயர்த்த முடிவு செய்தால் இந்தக் கூடுதல் செலவு வாடிக்கையாளர்களின் தலையில் தான் விழும். இலவச பரிவர்த்தனையினை விட அதிகமாகச் செய்யும் போது கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.

ஏடிஎம் மையங்கள் குறைப்பு

ஏடிஎம் மையங்கள் குறைப்பு

கட்டணத்தினை உயர்த்தி வரும் அதே நேரத்தில் கடந்த சில காலாண்டுகளாகப் பொதுத் துறை வங்கிகள், அரசு வங்கிகள் எனப் போட்டி போட்டுக் கொண்டு ஏடிஎம் மையங்களைக் குறைத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+