ரூ.12,000 கோடி மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிடுகிறது பந்தன் பாங்க்!
பந்தன் பாங்க் திங்கட்கிழமை 11.93 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை ஐபிஓ-ல் வெளியிட இருப்பதாக அறிவித்துள்ளது.

கொல்கத்தாவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பந்தன் பாங்க், பந்தன் ஃபினான்ஷியல் ஹ்ல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.
பந்தன் வங்கியானது 9.77 கோடி ரூபாயினை ஐபிஓ மூலமாகவும், 2.16 கோடி ரூபாயினைப் பங்குதாரர்கள் மூலமாகவும் பெற உள்ளது.
கோடக் மஹிந்திரா கேப்பிட்டல், ஆக்சிஸ் கேப்பிட்டல், கோல்ட்மேன் சாச்ஸ் (இந்தியா) செக்யூரிட்டிஸ், ஜேஎம் ஃபினான்ஸ் இன்ஸ்டிடியூட்ஷியல் செக்யூரிட்டிஸ் மற்றும் ஜெ.பீ. மோர்கன் இந்தியா ஆகியவை ஐபிஓ-ல் பந்தன் பாங்க் பங்குகளை விற்கும் பொறுப்பைப் பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications