புத்தாண்டு சிறப்புச் சலுகையாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது கடன் திட்டத்தின் மீதான வட்டியை 0.30 சதவீதம் குறைத்து 8.65 சதவீதமாகக் குறைத்துள்ளது.
பழைய வாடிக்கையாளர்கள்
இப்புதிய வட்டி குறைப்பு, ஏற்கனவே எஸ்பிஐ வங்கியில் பேஸ் ரேட்டில் இணைப்பட்ட கடன் பெற்று இருக்கும் பழைய வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்பட உள்ளதாகத் தெரிவித்துள்ளது எஸ்பிஐ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
பேஸ் ரேட் கீழ் எப்போதும் கடன் அளிக்காத எஸ்பிஐ வங்கி 0.30 சதவீதம் வட்டியைக் குறைத்ததன் மூலம் தற்போது 8.65 சதவீதத்தில்ல கடன் அளிக்க உள்ளது.
குறைந்தபட்ச வட்டி
மேலும் இந்திய வங்கி அமைப்பில் 8.65 சதவீதத்திற்குக் கடனை ஏந்தொரு வங்கியும் அளிக்காத நிலையில், தற்போது எஸ்பிஐ இதனைச் செய்துள்ளது.
மாணவர்கள்
இப்புதிய வட்டி குறைப்பின் மூலம் எஸ்பிஐ வங்கியின் நீண்ட நாள் வாடிக்கையாளர்களான ரீடைல் கடனாளிகள், குறிப்பாகக் கல்வி கடன் பெற்றுள்ள மாணவர்கள், வீட்டுக் கடன் பெற்றுள்ளவர்கள் என அனைத்து முக்கியத் தரப்பு வாடிக்கையாளர்களுக்கு இதன் பலன் கிடைக்கும்.
தற்போது 50 சதவீத வாடிக்கையாளர்கள் எம்சிஎல்ஆர் வட்டி விகிதத்தின் கீழ் உள்ளது குறிப்பிடத்தக்கது.
எம்சிஎல்ஆர் வட்டி விகிதம்
இந்த வட்டி விகிதம் குறுகிய காலகட்டத்திற்கு மட்டுமே நீடிக்கும், ஒவ்வொரு வருடமும் இதன் வரி மாற்றப்படும். மேலும் இது வங்கிகளுக்கு மத்தியிலும் வேறுபடும்.
கடந்த 3 ஆண்டுகளில் 7.70 சதவீதம் முதல் 8.10 சதவீதம் வரையில் இதன் வட்டி விகிதம் மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications