2018ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் நாட்டின் முன்னணி வங்கிகள் தங்களது நிதி நெருக்கடி மற்றும் நிதி திரட்டும் முயற்சியாகப் பல்வேறு நிறுவனங்களில் வைத்திருந்த பங்குகளை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்.
பொதுத்துறை வங்கிகள் தங்களது பங்கு இருப்பை விற்பனை செய்யும் முயற்சியில் இருக்கும்போது, தனியார் நிறுவனங்கள் தங்களது கிளை நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியிலிடும் ஐபிஓ திட்டத்தில் மூழ்கியுள்ளனர். ஆகமொத்த இந்த வருடத்தின் முதல் காலாண்டு வங்கித்துறை முதலீட்டாளர்களுக்குச் சிறப்பான வாய்ப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.
பாங்க் ஆப் இந்தியா
இதன் படி பாங்க் ஆப் இந்தியா, செக்யூரிட்டி டிரேடிங் கார்ப்ரேஷன் ஆப் இந்தியா நிறுவனத்தில் வைத்திருந்த 29.96 சதவீத பங்கு இருப்பை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, அதபோல் இவ்வங்கி ஸ்டார் யூனியந் டாய் இட்சி லைப் இன்சூரன்ஸ் நிறுவனத்தில் வைத்திருந்த 18 சதவீத பங்கிகளை ஏற்கன விற்பனை செய்துள்ளது.
பிற நிறுவனங்கள்
அதேபோல் பாங்க் ஆப் இந்தியா ஆக்சா இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ், சென்டரல் டெப்பாசிட்டரி சர்வீசஸ், நேஷ்னல் கோலேட்ரெல் மேனேஜ்மென்ட் சர்வீசஸ், எஸ்ம்ஈ ரேட்டிங் ஏஜென்சி ஆப் இந்தியா, பிஓஐ ஷேர்ஹோல்டிங், பிஓஐ மெர்சென்ட் பேங்கர்ஸ் மற்றும் ASREC ஆகிய நிறுவனங்களிலும் பாங்க் ஆப் இந்தியா தனது பங்கு இருப்பைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
ஐடிபிஐ வங்கி
பாங்க் ஆப் இந்தியா போல் ஐடிபிஐ வங்கி, ஐடிபிஐ பெடரல் இன்சூரன்ஸ், ஐடிபிஐ டிரஸ்டிஷிப், என்எஸ்ஈ ஆகிய நிறுவனங்களில் இருந்து பங்கு இருப்பைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளது
கனரா வங்கி
கனரா வங்கி தனது கிளை நிறுவனங்களான கனரா ரோமெக்கோ ஏஎம்சி, கேன்பாங் கம்பியூட்டர் சர்வீசஸ், கேன் பின் ஹோம்ஸ் ஆகிய நிறுவனங்களில் பங்கு இருப்பைக் குறைக்க முடிவு செய்துள்ளது.
பாங்க் ஆப் பரோடா
பாங்க் ஆப் பரோடா தனது கிளை நிறுவனமான BOB பினான்சியல் சொல்யூஷன்ஸ் நிறுவனத்தின் பங்கு இருப்பை விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளது.
ஐபிஓ
ஐசிஐசிஐ வங்கி, எச்டிஎப்சி வங்கி, எஸ்பிஐ, பஞ்சாம் நேஷ்னல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா ஆகிய வங்கிகள் தங்களது கிளை நிறுவனங்களைப் பங்குச்சந்தையில் பட்டியலிட முடிவு செய்துள்ளது.


Click it and Unblock the Notifications