இந்தியர்களுக்கு மிகவும் பிடித்த நிறுவனம் இதுதான்..!

இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சி 2017ஆம் ஆண்டில் குறைந்தாலும், சில முன்னணி நிறுவனங்கள் சரிவு அடையாமல் தனது வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டது. இந்நிலையில் புதிய இலக்குடன், வேகத்துடன் 2018ஆம் ஆண்டிற்குக் களமிறங்கியுள்ளது நிறுவனங்கள்.

இந்நிலையில் லிங்கிடுஇன் நிறுவனம் 2017ஆம் ஆண்டு ஊழியர்களுக்கு அதிகம் பிடித்த நிறுவனங்கள் குறித்த ஆய்வைச் செய்துள்ளது. இந்த ஆய்வின் மூலம் பெருமைக்குக் கூறாமல் உண்மையிலேயே ஊழியர்களுக்கு விருப்பமான டாப் 10 நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது லிங்கிடுஇன்.

முக்கியக் காரணிகள்

முக்கியக் காரணிகள்

இந்த ஆய்வில் வேலைவாய்ப்பு, ஊழியர்களைத் தொடர்ந்து பணி வைத்திருத்தல், ஊழியர்களைத் தக்கவைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஆய்வு 500 ஊழியர்களுக்கும் அதிகமான எண்ணிக்கைக் கொண்ட நிறுவனங்களில் மட்டும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் படி 2017ஆம் ஆண்டில் ஊழியர்களை அதிகளவில் கவர்ந்து டாப் 10 நிறுவனங்களின் முழுப் பட்டியல் உங்களுக்காக.

 

10வது இடம்

10வது இடம்

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பன்னாட்டு மென்பொருள் நிறுவனமான கேப்ஜெமினி இப்பட்டியலில் 10வது இடத்தைப் பிடித்துள்ளது. இந்நிறுவனத்தில் தற்போது 1,00,000த்திற்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில், இனி வரும் காலத்தில் இதன் அளவு மேலும் அதிகரிக்கும் எனத் தெரிகிறது.

9வது இடம்

9வது இடம்

4000 ஊழியர்கள் பணியாற்றும் பட்ஜெட் ஹோட்டல் புக்கிங் நிறுவனமான ஓஒய்ஓ ரூம்ஸ் 9வது இடத்தைப் பிடித்துள்ளது.

8வது இடம்

8வது இடம்

கூகிள் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஆல்பபெட் ஊழியர்களுக்குத் தனது அலுவலகத்தில் சிறப்பான சூழ்நிலையை அமைத்துத் தருகிறது. அதுமட்டும் அல்லாமல் ஊழியர்கள் அனைத்துப் பிரிவுகளிலும், வாய்ப்புகள் அளிக்கப்படும் காரணத்தால் அனைவருக்கும் பிடித்த நிறுவனமாக உருவெடுத்துள்ளது.

இந்நிறுவனத்தில் உலகளவில் 72,000 பேர் பணியாற்றும் நிலையில், இந்தியர்கள் இந்த நிறுவனத்தில் பணியாற்ற ஆர்வத்தில் உள்ளனர்.

 

7வது இடம்

7வது இடம்

புதிய கண்டுபிடிப்புகளுக்குப் பெயர்போன அடோப் என்னும் அமெரிக்க நிறுவனம் இப்பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் இந்நிறுவனத்தின் 30 சதவீத ஊழியர்கள் இந்தியாவில் பணியாற்றி வருகின்றனர்.

6வது இடம்

6வது இடம்

மென்பொருள் துறையில் சிறந்து விளங்கும் எச்சிஎல் டெக்னாலஜிஸ் லிங்கிடுஇன் ஆய்வின் ஊழியர்களுக்கு மிகவும் பிடித்தமான நிறுவனங்கள் பட்டியலில் 6வது இடத்தைப் பிடித்துள்ளது.

5வது இடம்

5வது இடம்

இந்தியாவில் ஆன்லைன் டாக்ஸி சேவையை அறிமுகப்படுத்தி, தற்போது இத்துறையில் அமெரிக்க நிறுவனத்திற்குப் போட்டி போடும் அளவிற்கு உயர்ந்துள்ளது ஓலா நிறுவனம் ஊழியர்களுக்குப் பிடித்தமான நிறுவன பட்டியலில் 5வது இடத்தைப் பிடித்துள்ளது.

4வது இடம்

4வது இடம்

பேடிமென்ட் மற்றும் காமர்ஸ் துறையில் இந்தியாவின் மகிப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் ஓன்97 கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

இந்நிறுவனத்தில் 13,000 ஊழியர்கள், 2 கோடி வாடிக்கையாளர்கள் கொண்டு இயங்கி வருகிறது.

 

3வது இடம்

3வது இடம்

இந்தியாவின் மிகப்பெரிய தணிக்கை நிறுவனங்களில் ஒன்றான கேபிஎம்ஜி நிறுவனம் இப்பட்டியலில் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

அமேசான்

அமேசான்

இந்தியா ஈகாமர்ஸ் சந்தையை முழுமையாகப் புரட்டி போட்ட அமேசான் தற்போது இந்திய ஊழியர்கள் மத்தியில் மிகப்பெரிய காதலாக மாறியுள்ளது. அமேசான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு பிளிப்கார்ட் நிறுவனத்தின் வர்த்தகம் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

2017ஆம் ஆண்டின் ஆய்வில் அமேசான் நிறுவனம் 2வது இடத்தில் உள்ளது

 

முதல் இடம்

முதல் இடம்

முதல் இடத்தைப் பிடிக்கப்போகும் நிறுவனம் குறித்துப் பல்வேறு கணிப்புகள் உங்களிடம் இருந்தாலும், ஈகாமர்ஸ் துறையைச் சேர்ந்த பிளிப்கார்ட் நிறுவனமே இப்பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

உங்களுக்கு..?

உங்களுக்கு..?

டாப் 10 பட்டியலில் இருக்கும் நிறுவனங்கள் உங்களுக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம், அப்படியானால் உங்களுக்கு மிகவும் பிடித்த நிறுவனம் எது..? நீங்கள் கனவு காணும் நிறுவனம் எது..?

கமெண்ட் பதிவிடும் இடத்தில் சொல்லுங்கள்..

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+