மஹிந்திரா அண்ட் மஹிந்திரா குழுமத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா டிவிட்டரில் மிகவும் ஆக்டிவாக இருப்பவர், இந்தியாவில் இருக்கும் பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் பொதுவாக சமுக வலைதளத்தில் இருப்பதில்லை, ஆனால் ஆனந்த் மஹிந்திரா இன்றைய தலைமுறை வர்த்தக தலைவர்களை போல் டிவிட்டரை அதிகளவில் உபயோகித்து வருகிறார்.
இதே டிவிட்டரின் மூலம் பலருக்கும் உதவி செய்வது மட்டும் அல்லாமல் தினசரி செய்திகளுக்கு கருத்தும் தெரிவித்து வருகிறார் ஆனந்த் மஹிந்திரா. இந்த முறை தமிழ்நாட்டை குறித்து பேசியுள்ளார்.
ரஜினியின் அரசியல் பிரவேசம்..
டிசம்பர் 31ஆம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் வருகை குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியான முதலே கன்னி முனை முதல் காஷ்மீர் எல்லை வரையில் ரஜினிகாந்த குறித்த செய்திகளை வந்த வண்ணம் உள்ளது.
டிவிட்டர்
ரஜினியின் அறிவிப்பை அடுத்து டிவிட்டரில் #Rajinikanthpoliticalentry என்ற ஹேஷ்டேக் கூட டிரென்டானது குறிப்பிடத்தக்கது. இதுமட்டும் அல்லாமல் ஆன்மீக அரசியல் என்பது சமுக வலைதளத்தில் மிகவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
ஆனந்த் மஹிந்திரா
இந்நிலையில் டிவிட்டரில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து வெளியான செய்திக்கு ரீடிவீட் செய்துள்ள ஆனந்த மஹிந்திரா,
தமிழ்நாடு மட்டும் ஒரு பங்காக இருந்தால், இப்போதே நான் அதை வாங்கி நீண்ட காலத்திற்கு வைத்திருவேன். என தெரிவித்துள்ளார்.
சிரிப்பு பங்கு
ஆனந்த் மஹிந்திராவின் டீவிட்டுக்கு பதில் அளித்த சிலர் தமிழ்நாடு பங்காக இருந்தால் ரஜினி ஒரு சிரிப்பு பங்காக இருப்பார் என நினா அரோரா என்பவர் தெரிவித்துள்ளார்.
மாற்று அரசியல்
அதேபோல் சிலர் ஆனந்த் மஹிந்திரா மற்றும் ரஜினிக்கு ஆதரவாக, தமிழ்நாட்டு மக்கள் தற்போது மாற்று அரசியலுக்கு வாக்களிக்க தயாராக உள்ளனர். என்றும் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிலையான அரசு
நீரஜ் கன்வர் என்பவர் ஆனந்த் மஹிந்திரா கூறுவதை தான் ஒப்புக்கொள்வதாகவும், கடைசியாக தமிழ்நாட்டு அரசியல் நிலையான அரசாக உருமாறி வெற்றிகரமான பொருளாதாரத்தை உருவாக்கும் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
புதிய கட்டுப்பாடு
பிடித்த நிறுவனம்


Click it and Unblock the Notifications