உற்பத்தி பிஎம்ஐ குறியீடு டிசம்பர் மாதத்தில் உயர்வு..!
2017 டிசம்பர் மாதத்தில் இந்தியாவின் உற்பத்தித் துறையில் புதிய ஆர்டர்களின் எண்ணிக்கை அதிகரித்து, உற்பத்தியும் அதிகரித்துள்ளது. இதனால் நிக்கி இந்தியா பிஎம்ஐ குறியீடு 54.6 புள்ளிகளாக உயர்ந்துள்ளது.
நவம்பர் மாதம் இதன் அளவீடு 52.6 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேக்ரோபொருளாதாரத் தரவுகளை இன்று மத்திய அரசு வெளியிட்டது, இதில் உற்பத்தி துறையின் வளர்ச்சியைக் குறிக்கும் பிஎம்ஐ குறியீட்டின் அளவை வெளியிட்டுள்ளது மத்திய அரசு.

பொதுவாகப் பிஎம்ஐ குறியீடு 50 புள்ளிகளுக்குக் குறைவாக இருந்தால், உற்பத்தித் துறை சரிவு பாதையில் இருப்பதைக் குறிக்கும். அதேபோல் 50 புள்ளிகளுக்கும் அதிகமாக இருந்தால் வளர்ச்சி பாதையில் உள்ளதாகப் பொருள்.
டிசம்பர் 2012, அக்டோபர் 2016க்குப் பின் டிசம்பர் 2017இல் தான் உற்பத்தித் துறைக்கு அதிகளவிலான ஆர்டர்கள் குவிந்துள்ளது.


Click it and Unblock the Notifications