2018-ம் ஆண்டை வரவேற்கும் வகையில் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 2.5 வருடங்கள் இல்லாத அளவிற்கு உயர்ந்து இன்று காலை 10:19 மணி நிலவரத்தின் படி 63.69 ரூபாயாக உள்ளது.
நேற்றும் மாலை இதுவே 63.44 ரூபாயாக இருந்தது. இன்று காலை உயர்ந்து 63.69 ரூபாயாக உள்ளது. ஜூலை 2015-ம் ஆண்டுக்குப் பிறகு ரூபாயின் மதிப்பு அதிகளவில் உயர்ந்து இருக்கிறது. திங்கட்கிழமை ரூபாயின் மதிப்பு உயர்ந்து 6368 டாலராக இருந்தது.
கடந்த சில நாட்களாகச் சர்வதேச அளவில் அமெரிக்க டாலரின் மதிப்பு சரிந்து காணப்படுகிறது. எனவே இந்திய ரூபாய் மதிப்பு உயர்வதற்கான காரணங்கள் என்ன என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம்.
நாணயம் விற்பனை
அமெரிக்க நாணயங்களை வங்கிகள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் விற்பது அதிகரிப்பது தான் ரூபாயின் மதிப்பு உயரக் காரணம் என்று வணிகர்கள் கூறுகின்றனர்.
அமெரிக்க டாலர்
2003-ம் ஆண்டுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு மிக மோசமான நிலையினை அமெரிக்க டாலர் பெற்றுள்ளது. அமெரிக்காவை தவிரப் பிற நாடுகளின் பொருளாதார வளர்ச்சியானது வேகமாக வளர்ச்சி அடையத் துவங்கியுள்ளது, மத்திய வங்கிகள் நாணய கொள்கைகள் போன்றவையும் அமெரிக்க டாலர் மதிப்புச் சரிவிற்கான காரணங்கள் ஆகும்.
ரூபாய் மதிப்பு
2017-ம் ஆண்டில் மட்டும் அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 6 சதவீதம் உயர்ந்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் இந்திய பங்கு சந்தையில் அதிகரித்து வரும் முதலீடுகள் ஆகும். மறு பக்கம் பிற உலக நாடுகள் மத்தியிலும் அமெரிக்க டாலர் சரிவை சந்தித்து வருவதும் ஆகும்.
முதல் காலாண்டு
2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராகச் சிறப்பாகச் செயல்படும் என்று ஃபோரெக்ஸ் வல்லுநர்கள் கூறுகின்றனர். அமெரிக்க மத்திய வங்கியானது வட்டி விகிதத்தினை மாற்றி அமைத்தாலும் அவை 2018-ம் ஆண்டு இந்திய ரூபாயின் மதிப்பைப் பெரிய அளவில் பாதிக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகின்றனர்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications