ஆர்பிஐ பத்திர திட்டம் நிறுத்தப்படவில்லை.. நிதியமைச்சகம் அறிவிப்பு..!
மத்திய அரசு திங்கட்கிழமை, ஆர்பிஐ பத்திர திட்டம் என்று சுருக்கமாக அழைக்கப்படும் இந்திய அரசு வெளியிடும் சேமிப்புப் பத்திரம் 2003இல் முதலீடு செய்யவோ அல்லது வாங்க ஜனவரி 2, 2018ஆம் தேதியே கடைசி என அறிவித்தது.
தற்போது இதற்கு நிதியமைச்சம் திட்டத்தில் முதலீடு நிறுத்தப்படவில்லை 8 சதவீதமாக இருந்த வட்டியை 7.75 சதவீதமாக மாற்றப்பட்டுள்ளது என்று விளக்கியுள்ளது. 8 சதவீத வட்டியில் இனி முதலீடு செய்ய முடியாது.

இத்திட்டத்தில் தனிநபர் எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம், அதிகப்படியான தொகை என்பது எதுவுமில்லை. மேலும் இத்திட்டத்தில் கிடைக்கும் வருமானத்திற்கு வருமான வரி செலுத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் சில்லறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கும் வகையில், 2003ஆம் ஆண்டு அரசு இந்தப் பத்திரத்தை வெளியிட்டது.


Click it and Unblock the Notifications