ரஜினி முதல்வரானாலும் தமிழ்நாட்டுக்கு பயனில்லை.. மக்களே சொல்லிடாங்க..!

Written By:
Subscribe to GoodReturns Tamil

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் அரசியல் வருகை மற்றும் தலைவர்கள், முக்கியமான நபர்களின் சந்திப்பு ஆகியவை தற்போது மக்கள் மத்தியில் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

அதிலும் ரஜினியின் ரசிகர்களின் ஆதரவும் அதிகமாக இருக்கும் பட்சத்தில் சட்டமன்ற தேர்தலில் முன்னணி கட்சிகளுக்கு ரஜினியின் புதுக் கட்சி கடுமையா போட்டி அளிக்கும் எனவும் கருத்து நிலவுகிறது. மேலும் ரஜினியின் கட்சி பிஜேபியின் பி டீம் எனவும் சமுக வலைத்தளத்தில் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

முதல்வர்

இந்நிலையில் ரஜினி சொன்னதைப் போலவே தமிழ்நாட்டில் அடுத்து நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போயிட்டு வெற்றி அடைந்து தமிழக முதல்வர் பதவியை அடைந்தால் தமிழ்நாட்டின் பொருளாதார நிலை உயருமா..? என்று தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் வாக்கெடுப்பு நடத்தினோம்.

மக்களின் ஆதரவு..

தமிழ் குட்ரிட்டன்ஸ் தளத்தில் நடத்திய வாக்கெடுப்பில் 3249 பேர் கலந்துகொண்டு, ரஜினியின் அரசியல் பிரவேசம், அவர் வெற்றிபெற்றால் தமிழ்நாட்டில் நடக்கும் மாற்றங்கள், பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றின் அடிப்படையில் வாக்கெடுப்பில் மக்கள் கலந்துக்கொண்டனர்.

தமிழ்நாட்டில் பொருளாதாரம்

ரஜினி சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெறு தமிழக முதல்வரானால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயருமா என்ற கேள்விக்கு. கண்டிப்பாக உயரும் என்று 34 சதவீத மக்கள் அதாவது கலந்துகொண்டவர்களில் 1106 பேர் வாக்களித்து உள்ளனர்.

உயராது..

ரஜினி முதல்வரானால் தமிழ்நாட்டின் பொருளாதாரம் உயராது என்று அதிகப்படியாக 66 சதவீத மக்கள் வாக்களித்துள்ளனர். பொருளாதாரம் உயராது என்று 3,249 பேரில் 2,146 பேர் பதில் அளித்துள்ளனர்.

நீங்களும் வாக்களிக்கலாம்..

உங்களில் கருத்து மாறுபட்டு இருந்தாலோ அல்லது 2,146 பேரின் பார்வை உங்களுக்குச் சரி எனத் தெரிந்தாலோ வாக்களித்து உறுதிப்படுத்துங்கள்.

வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

 

ரஜினி கருணாநிதி சந்திப்பு

ரஜினி கருணாநிதி சந்திப்பு தமிழக அரசியலில் பல அதிர்வுகளை கிளப்பியதை யாராலும் மறுக்க முடியாது, ஆனால் இந்த சந்திப்பையும் நெட்டிசன்கள் வழக்கம் போல் காலத்துள்ளனர்.

அண்ணாவின் அறிவாலயமும் (கருணாநிதி ) . தமிழக அன்னையரின் அன்பாலயமும்( ரஜினி காந்த் ) சந்தித்தது என்று சென்டிமென்டாக டுவீட் போட்டுள்ளார் இவர்.

 

சின்சியர் நெட்டிசன்.

ரஜினி படத்துல வேசம் போட்டாதான் அரசியல்வாதி, நாங்க பிறக்கும்போதே அரசியல்வாதி. ரஜினிக்கு அரசியல் புரியவைக்கபடும் என்று போட்டுள்ளார் இந்த சின்சியர் நெட்டிசன்.

ஜோதிடர்

இதை தொடர்ந்து இன்று உடுப்பியை சேர்ந்தவர் பிரகாஷ் அம்முன்னாய என்ற ஜோதிடர். சமீபத்தில் நடைபெற்ற குஜராத் சட்டசபை தேர்தல் முடிவுகளை துல்லியமாக அவர் கணித்திருந்தார்.

குஜராத்தில் காலை 10 மணிவரை காங்கிரஸ் முன்னிலை பெறுவதை போன்ற தோற்றம் ஏற்படும். ஆனால் 10 மணிக்கு மேல் அது மாறி பாஜக தனிப்பெரும்பான்மையோடு ஆட்சியமைக்கும் என்பதே கிரக நிலை என்று கணித்திருந்தார்.

 

ரஜினிகாந்த் அரசியல் நிலை

இந்த நிலையில், அவர் ரஜினிகாந்த் அரசியல் நிலை என்னவாகும் என்பது பற்றி கூறியுள்ளார்.

ரஜினிகாந்த் மகர ராசிக்காரர். சிம்ம லக்கினம். ரஜினிகாந்த்துக்கு 'துர்தரா' யோகம் உள்ளது. இந்த யோகம் உள்ளவர்களை எதிர்த்து நின்று யாராலும் ஜெயிக்க முடியாது. பின்னால் இருந்துதான் வெற்றி கொள்ள முடியும்.

லோக்சபா தேர்தலில் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் ராசி நிலவரப்படி அவர் கட்சி லோக்சபா தேர்தலில் போட்டியிட்டால் 3 முதல் 5 தொகுதிகளை வெல்ல முடியும். ரஜினி ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் உள்ளது. எவ்வளவு உயரத்திற்கு போனாலும், இந்த தோஷம் இருந்தால் அவர்களை கீழே கொண்டு சென்றுவிடும். இதற்கு ஒரு உபாயம் உள்ளது. ரஜினிகாந்த், தன்னை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த கூடாது. கட்சி தலைவராக இருக்கலாம் என்று அவர் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Even Rajinikanth became CM of tamilnadu: No use for Economy

Even Rajinikath became CM of tamilnadu: No use for Economy
Company Search
Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?

Find IFSC

Get Latest News alerts from Tamil Goodreturns