2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு முதன் முறையாக இந்தியாவின் டிஜிட்டல் பரிவர்த்தனையின் எண்ணிக்கை 1 பில்லியனை தொட்டுள்ளது.
நவம்பர் மாதம் 997.1 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 6.05 சதவீதம் உயர்ந்து 1.06 பில்லியன் டிஜிட்டப் பரிவர்த்தனை செய்யப்பட்டுள்ளதாக ஆர்பிஐ வங்கி செவ்வாய்க்கிழமை தரவுகளை வெளியிட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை
இந்தியாவின் ஒட்டுமொத்த டிஜிட்டல் பரிவர்த்தனை அளவினை பார்த்தால் பணமதிப்பு நீக்கப்பட்ட காலக் கட்டத்தில் 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 957.5 மில்லியன் டிஜிட்டல் பரிவர்த்தனை செய்யப்பட்டது. இதுவே ஒரு ஆண்டுக்குப் பிறகு 1 பில்லியன் பரிவர்த்தனை நடந்துள்ளது.
எதுவெல்லாம் டிஜிட்டல் பரிவர்த்தனையின் கணக்கெடுக்கப்பட்டுள்ளது?
இணையதள வங்கி சேவை, பிரீபெய்டு பேமெண்ட் சேவைகள், யூபிஐ, டெபிட், கிரெடிட் கார்டுகள் என மொத்தமாக 125.51 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் டிசம்பர் மாதம் செய்யப்பட்டுள்ளது. இதுவே அதிகபட்சமாகச் சென்ற மார்ச் மாதம் 149.59 டிரில்லியன் ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன.
யூபிஐ
டிஜிட்டல் பரிவர்த்தனையில் யூபிஐ பரிவர்த்தனையின் அளவும் டிசம்பர் மாதம் புதிய சாதனையினைப் படைத்துள்ளது. நவம்பர் மாதம் 104.5 மில்லியன் யூபிஐ பரிவர்த்தனை செய்யப்பட்ட நிலையில் டிசம்பர் மாதம் 40% உயர்ந்து 145.5 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் மாதம் வரை 96.4 பில்லியன் ரூபாயில் இருந்த பரிவர்த்தனையின் மதிப்பும் 36 சதவீதம் உயர்ந்து 131.4 பில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது.
ஆர்பிஐ
யூபிஐ சேவையினை அறிமுகம் செய்த ஆர்பிஐ வங்கியும் கடந்த 2016 டிசம்பர் மாதம் முதல் 2017 டிசம்பர் வரையில் மட்டும் 7000 சதவீதமாக யூபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துள்ளது என்று தெரிவித்துள்ளது.
பிம் செயலி
பிம் செயலியின் மூலமாக டிசம்பர் மாதம் 145 மில்லியன் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. ஆண்டிராய்டு செயலியினை 21.65 மில்லியன் பயனர்களும், ஐ ஓஎஸ் செயலியினை 1.03 மில்லியன் பயனர்களும் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
டெபிட்/கிரெடிட் கார்டுகள்
நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது 5 சதவீதம் உயர்ந்து 257.2 மில்லியன் டெபிட்/கிரெடிட் கார்டுகள் பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளது. இதன் மதிப்பு 515.9 பில்லியன் ரூபாய் ஆகும்.
என்ஈஎப்டி/ஆர்டிஜிஎஸ்
இணையதள வங்கி சேவை பரிவர்த்தனையில் நவம்பர் மாதத்துடன் ஒப்பிடும் போது டிசம்பர் மாதம் என்ஈஎப்டி 4% மற்றும் ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை 1% உயர்ந்துள்ளது.
மத்திய அரசு
மத்திய அரசு டிஜிட்டல் பரிவர்த்தனையினை ஊக்குவிக்கும் விதமாகப் பிம் யூபிஐ, டெபிட்/கிரெட்ட் கார்டு போன்ற பரிவர்த்தனைகளுக்கு 2000 ரூபாய் வரை இருந்து வந்த வணிகத் தள்ளுபடி விகித கட்டணத்தினை நீக்கியுள்ளது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications