தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சியாளர்கள் இண்டெல், ஏஎம்சி மற்றும் ஏஆர்எம் ஹோல்டிஸ் சிப்புகளுடுன் இயங்கும் கணினிகளைத் தக்கும் புதிய வைரசின் வருகையால் ஹேக்கர்கள் முக்கியமான தகவலை எளிதாகத் திருட முடியும் என்றும் தெரிவித்தனர்.
இதனை அடுத்து இண்டெல் நிறுவனப் பங்குகள் இன்று சரிவுடன் வர்த்தகம் செய்யப்பட்டு வருகின்றன. எனவே பங்குகளின் நிலை என்ன புதிய வைரஸ்களால் என்ன பாதிப்பு என்று விளக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
இண்டெல்
இண்டெல் நிறுவன சிப்புகளுக்காகவே ஒரு பக்கை ஹேக்கர்கள் உறுவாக்கியுள்ளதகவும் இதனால் இண்டெல் கணினிகள், லேப்டாப்புகள், ஸ்மார்போன், டேப்ளட் மற்றும் இணையதளச் சர்வர்கள் போன்றவை அதிகப் பாதிப்படையும் என்றும் தெரிவித்துள்ளதால் இன்று பங்குகள் 3.39 சதவீதம் சரிந்து 45.26 டாலராக வர்த்தகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது தான் இண்டெல் நிறுவனம் இதனைத் தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
ஏஎம்டி
மறு பக்கம் ஏஎம்டி நிறுவனத்தின் சிப்புகளும் பாதிப்படைய வாய்ப்புகள் இருந்தாலும் பேட்ச்சுகள் உருவாக்கி பாதிப்புகளைப் பெறும் அளவில் குறைத்துள்ளதால் 5.19 சதவீதம் வரை உயர்ந்து 11.55 டாலர்கள் ஒரு பங்கு என வத்தகம் செய்யப்பட்டு வருகிறது.
மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள்
மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்கள் இந்த வைரஸ் தாக்குதலினை தடுக்கும் விதமாகத் தங்களது கணினிகளில் பேட்ச்சுகள் அளிக்கப்பட்டுள்ளன. இதற்குக் கணினியை பயன்படுத்துபவர்கள் அசல் இயங்கு தளங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
அமேசான் வெப் சர்வீசஸ்
கிளவுட் கம்ப்யூட்டிங் சேவையில் முக்கிய நிறுவனமான அமேசான் தங்களது பெரும்பாலான சர்வர்களில் ஏற்கனவே பேட் செய்யப்பட்டுள்ளது. மீதம் உள்ள சர்வர்களுக்குப் பேட்ச் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று தெரிவித்துள்ளது.
கூகுள்
கூகுள் நிறுவனத்தினைப் பொருத்தவரையில் ஜிமெயில் பயன்படுத்துபவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை, ஆண்டிராய்டு போன்களுக்கும் சிக்கல் இல்லை. ஆனால் க்ரோம் உலவி மற்றும் பிற சேவைகளைப் பயன்படுத்துபவர்கள் புதுப்பிப்புகளை நிறுவ வேண்டும்.
ஏஆர்எம்
ஏஆர்எம் நிறுவனம் தங்களது சிப்பிகளைப் பயன்படுத்தும் ஸ்மாரெட்போன் நிறுவனங்களுக்குப் பேட்ச்சுகளை ஏற்கனவே வழங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இரண்டு வைரஸ்கள்
இண்டெல், ஏஎம்சி மற்றும் ஏஆர்எம் ஹோல்டிஸ் சிப்புகள் உள்ள கணினிகள், ஸ்மார்போன்கள் போன்றவையினை மெல்ட் டவுன், ஸ்பெக்டர் என இரண்டு வகையான வரைஸ்கள் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.
மெல்ட் டவுன்
மெல்ட் டவுன் வைரஸ் உங்களது கணினி அல்லது ஸ்மார்ட்போனை பாதித்து இருந்தால் உங்களுக்குத் தெரியாமல் மென்பொருள் ஒன்றைப் பதிவிறக்கம் செய்து வன்பொருள்களின் செயல்பாடுகளைக் கூறைக்கும் என்று கூறுகின்றனர்.
ஸ்பெக்டர் வைரஸ்
ஸ்பெக்டர் வைரஸ் பாதிக்கப்படும் கணினிகளில் உள்ள முக்கிய விவரங்களான பாஸ்வர்டு, புகைப்படங்கள் போன்ற விவரங்கள் திருடப்படும். இது இணையதளத்தில் தேவையில்லாத இணைப்புகளைக் கிளிக் செய்யும் போது கணினியில் நிறுவப்படும்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications