கடந்த ஜூலை 22-ம் தேதி மத்திய அரசு ரயில் டிக்கெட் புக்குங் செய்யும் போது மானியத்தினை விட்டுக்கொடுக்குமாறு கோரிக்கை வைத்தது. இதனை அடுத்து ஜூலை 11 முதல் நவம்பர் 33 வரையில் மட்டும் 11 லட்சத்திற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் தங்களது டிக்கெட் மானியத்தினை விட்டுக்கொடுத்துள்ளனர் என்று மத்திய அரசு தெரிவித்தது.
2016-ம் ஆண்டு முதல் ரயில் டிக்கெட் மானியத்தினை 100 சதவீதமும் விட்டுக்கொடுப்பதற்கான திட்டத்தினை அறிமுகம் செய்த மத்திய அரசு 2017-ம் ஆண்டு 50 சதவீதம் மானியம் விட்டுக்கொடுக்கும் திட்டத்தினையும் அறிமுகம் செய்தது.
மொத்த எண்ணிக்கை
அதில் 5.67 லட்சம் மூத்த குடிமக்கள் 100 சதவீதம் டிக்கெட் மானியத்தினையும் 4 மாதத்தில் விட்டுக்கொடுத்துள்ளதாகவும், 5.81 லட்சம் நபர்கள் 50 சதவீதம் மானியத்தினை விட்டுக்கொடுத்துள்ளதாகவும் ரயில்வே அமைச்சர் ராஜே கோஹெயின் நாடாளுமன்றத்தில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.
மொத்தமாக 11.48 லட்சம் முத்த குடிமக்கள் தங்களது ரயில் டிக்கெட் மானியத்தினை விட்டுக்கொடுத்துள்ளனர்.
எதற்காக இந்த திட்டம்?
ரயில் டிக்கெட் மானியத்தினை விட்டுக்கொடுக்கும் திட்டமானது ரயில்வே துறைக்கு ஏற்பட்டு வந்த 1,300 கோடி ரூபாய் இழப்பைக் குறைப்பதற்காகவே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
மானியத்தால் அரசுக்கு ஏற்படும் செலவு
தற்போது வரை இந்திய ரயில்வே நிர்வாகம் 43 சதவீத டிக்கெட் கட்டணத்தினை மானியமாக வழங்கி வருகிறது. இதனால் ஆண்டுக்கு 30,000 கோடி ரூபாய் வருவாயினை ரயில்வே நிர்வாகம் இழந்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் 1,600 கோடி ரூபாயினை சலுகை விலை டிக்கெட் மூலமாக ரயில்வே நிர்வாகம் இழந்து வருகிறது.
ரயில் பயணிகள் பங்கு
ரயில் பயணிகளிடம் இருந்து 57 சதவீத செலவுகளுக்கான டிக்கெட் கட்டணத்தினை மட்டுமே ரயில்வே நிர்வாகம் வசூலித்து வருகிறது என்று கூறுகிறது. ஆனால் நம்மை ஆலும் எம்பி, எம்எல்ஏ-க்களுக்கு குறிப்பிட்ட அளவில் ரயில் மட்டும் இல்லாமல் விமான டிக்கெட்களையும் இலவசமாக மத்திய அரசு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications