பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2018 தாக்கல்..!
2018-19ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கை வருகிற பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என் நாடாளுமன்ற விவகார துறை அமைச்சர் அனந்த் குமார் இன்று அறிவித்தார்.
மேலும் அவர் பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29ஆம் முதல் துவங்கி பிப்ரவரி 9ஆம் தேதி வரையில் நீடிக்கும் என்றும், 2ஆம் கட்ட கூட்டம் மார்ச் 5 முதல் ஏப்ரல் 6 வரையில் நடைபெறும் எனவும் அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத் தொடரை ஜனவரி 29ஆம் தேதியன்று ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இரு அவைகளிலும் துவங்கி வைப்பார் என அனந்த் குமார் தெரிவித்தார்.
பொதுவாகப் பட்ஜெட் அறிக்கை பிப்ரவரி கடைசி நாளில் அறிவிக்கப்படும் நிலையில் மோடி தலைமையிலான அரசு செப்டம்பர் 2016இல் மாற்றிப் பிப்ரவரி 1ஆம் தேதி மாற்றப்பட்டது.
குளிர்காலக் கூட்டத்தொடர் இன்று முடிகிறது.


Click it and Unblock the Notifications