ஐஐஎப்டி மாணவர்களுக்கு அடித்தது ஜாக்பாட்.. ஆண்டுக்கு ரூ.95 லட்சம் சம்பளம்..!

2018-ம் ஆண்டு இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் ஃபாரின் டிரேட் மாணவர்களுக்கு மிகப் பெரிய ஜாக்பாட்டினை அளித்துள்ளது.

2016-2018 ஆண்டில் படிப்பை முடித்துவிட்டுச் செல்லும் மாணவர்களுக்குக் கிட்டத்தட் ஆண்டுக்கு 1 கோடி ரூபாய் வரை சம்பளத்துடன் வேலைக் கிடைத்து இருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

 95 லட்சம் சம்பளம் பெற்ற மாணவர்கள்

95 லட்சம் சம்பளம் பெற்ற மாணவர்கள்

நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி 4 ஐஐஎப்டி மாணவர்களுக்கு 95 லட்சம் மாதம் சம்பளம் என்றும் 7 மாணவர்களுக்கு 50 லட்சம் ஆண்டுச் சம்பளம் என்று தெரியவந்துள்ளது.

 பிஸ்னஸ் ஸ்கூல்ஸ்

பிஸ்னஸ் ஸ்கூல்ஸ்

2018-ம் ஆண்டு ஐஐஎப்டி-ல் படித்து முடித்துவிட்டு வெளியில் செல்லும் மாணவர்களுக்கான வளாக வேலை வாய்ப்பு நேர்காணலில் இந்தச் சம்பளம் கிடைத்து இருப்பது பிஸ்னஸ் ஸ்கூல்ஸ் வட்டாரத்தில் மிகப் பெரிய ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியுள்ளது.

வெளிநாடு வேலை வாய்ப்புகள்

வெளிநாடு வேலை வாய்ப்புகள்

அது மட்டும் இல்லாமல் ஐஐஎப்டி மாணவர்களில் 31 பேருக்குத் தென் ஆப்ரிக்கா, தாய்லாந்து, ஆப்ரிக்கா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளிலும் வேலைவாய்ப்புகள் கிடைத்துள்ளது.

ஐஐஎப்டி மாணவர்கள்

ஐஐஎப்டி மாணவர்கள்

ஐஐஎப்டி-ல் இருந்து 2018ம் ஆண்டு 288 மாணவர்கள் வெளியில் செல்வதாகவும் அதில் சென்ற ஆண்டுடன் ஒப்பிடும் போது 29.10 சதவீதம் பேருக்கு இந்த ஆண்டுக் கூடுதலாக வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ளதாகவும் மொத்தம் 110 நிறுவனங்கள் பணிக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

நேர்காணலுக்கு வந்த முக்கிய நிறுவனங்களின் பட்டியல்

நேர்காணலுக்கு வந்த முக்கிய நிறுவனங்களின் பட்டியல்

பொதுவாக ஐஐஎப்டி கல்லுரியில் வேலைக்கு ஆட்களை எடுக்க வரும் நிறுவனங்கள் மட்டும் இல்லாமல் அமேசான், ஆதித்யா பிர்லா குழுமம், டாபர், ஷெல், பைன் கேபிளிட்டி சென்டர், காக்னிஸன்ட் பிஸ்னஸ் கன்சல்டிங், இன்ஃபோசிஸ் மேனேஜ்மெண்ட் கன்சல்டிங், விப்ரோ ஐடி கன்சல்டிங், டாடா கன்சல்டிங் குரூப், ஜி.இ., எல் அண்ட் டி மற்றும் இன்னும் பல என டெக் மஹிந்திரா, பெப்சிகோ, பிஎம்டபிள்யூ, சிபி குழுமம், டெலாய்ட் யுஎஸ்ஐ (எஸ் & ஓ) எல்எல் மற்றும் யெஸ் பேங்க் உள்ளிட்ட நிறுனங்களும் மாணவர்களைப் பணிக்கு எடுத்துள்ளன.

சராசரி சம்பளம்

சராசரி சம்பளம்

2017-ம் ஆண்டு இந்தக் கல்லூரி மாணவர்களுக்குச் சராசரியாக 18.27 லட்சம் ரூபாய் சம்பளம் கிடைத்துள்ள நிலையில் 2018-ம் ஆண்டு 19.25 லட்சம் ரூபாயாக அதிகரித்துள்ளது.

 2017 - 2018 ஓர் ஓப்பீடு

2017 - 2018 ஓர் ஓப்பீடு

2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 ஆண்டு 29.10 சதவீதம் கூடுதல் வேலை வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் சென்ற ஆண்டு இருந்து 74 ஆஃபர்களும் 93 ஆக அதிகரித்துள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+