விஸ்தரா விமானப் போக்குவரத்து நிறுவனம் சென்னைக்கு விமானங்களை இயக்கப் புதிதாக இரண்டு வழித்தடங்களை அறிமுகம் செய்ய உள்ளது.
அதுமட்டும் இல்லாமல் டாடா குழுமம், சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனம் இரண்டும் இணைந்து நடத்தி வரும் விஸ்த்ரா விரைவில் உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை மட்டும் இல்லாமல் வெளிநாட்டு விமானப் போக்குவரத்து சேவையினையும் அறிமுகம் செய்ய உள்ளது.
சென்னை - டெல்லி
டெல்லி - சென்னை மற்றும் சென்னை டெல்லி இடையிலான விமானப் போக்குவரத்துச் சேவையினை 2018 பிப்ரவரி 15 முதல் விஸ்தரா நிறுவனம் துவங்க உள்ளது.
சென்னை - போர்ட் பிளேயர்
இதுவே சென்னை - போர்ட் பிளேயர் வழித்தடத்தில் விமானச் சேவையினை 2018 மார்ச் 1 முதல் அளிக்க இருப்பதாகவும் டிக்கெட் புக்கிங்கை விஸ்தார நிறுவனம் துவங்கியுள்ளது.
டிக்கெட் கட்டணம்
டெல்லி - சென்னை செல்ல 3,099 ரூபாய் என்றும், சென்னை - போர்ட் பிளேயர் செல்ல 3,699 ரூபாய் எனவும் இணையதளத்தில் டிக்கெட் முன்பதிவு செய்யும் போது குறிப்பிடப்பட்டுள்ளது.
விஸ்தரா
விஸ்தரா விமானப் போக்குவரத்து சேவையானது 22 வழித்தடங்களில் வாரத்திற்கு 700 விமானச் சேவையினை 17 ஏர்பஸ் A320 விமானங்கள் மூலம் வழங்கி வருகிறது.


Click it and Unblock the Notifications