இன்றைய வேகமான மற்றும் போட்டி நிறைந்த வர்த்தகச் சந்தையில் ஒரு நிறுவனத்தின் வெற்றி அடைய செய்வது சாதாரண விஷயமில்லை. இத்தகைய முக்கியமான பணிக்கு பொறுப்பானவர் தான் சீஇஓ. சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால் ஒரு நிறுவனத்தின் முதலீட்டாளர்களுக்குக் கிடைக்கும் லாபமும் முதல் ஒரு நிறுவனத்தின் அடிமட்ட ஊழியர்களுக்கு அளிக்கப்படும் சம்பளம், ஊதிய உயர்வு என அனைத்தும் அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியின் செயல்பாடுகளில் தான் உள்ளது.
இதனாலேயே நிர்வாகம் இப்பதவியில் இருப்பவர்களுக்கு அதிகப்படியான சம்பளம் அளிக்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் அதிகம் சம்பளம் வாங்கும் சீஇஓவை பற்றித்தான் நாம் இப்போது பார்க்கப்போகிறோம்.
முரளி கிருஷ்ணா திவி
நாட்டின் முன்னணி பார்மா நிறுவனங்களில் ஒன்றான திவி லேபாரட்ரிஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவரான முரளி கிருஷ்ணா திவி 2017ஆம் ஆண்டில் 45 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
சி.பி.குருஞானி
ஆனந்த் மஹிந்திரா தலைவராக இருக்கும் மஹிந்திரா & மஹிந்திரா குழுமத்தின் ஐடி சேவைப் பிரிவான டெக் மஹிந்திரா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருக்கும் சி.பி.குருஞானி 2017ஆம் ஆண்டில் 45.2 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
சி.பி.குருஞானி டெக் மஹிந்திராவின் சீஇஓவாக மட்டும் அல்லாமல் நிர்வாக இயக்குனராகவும் உள்ளார்.
விஷால் சிக்கா
இன்போசிஸ் நிறுவனத்தைத் தலையெழுத்தையே மாற்றியமைக்கப் போகிறார் என்று அனைவராலும் நம்பப்பட்ட முன்னாள் சீஇஓ விஷால் சிக்கா 2017ஆம் ஆண்டில் 48.7 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
ஓங்கார் எஸ் கன்வார்
அப்போலோ டையர் நிறுவனத்தின் தொடர் வெற்றிக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான பங்கு அளித்து வரும் ஓங்கார் எஸ் கன்வார் இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றி வருகிறார்.
2017ஆம் ஆண்டில் ஓங்கார் எஸ் கன்வார் சுமார் 53.3 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று அசத்தியுள்ளார்.
சுனில் கந்த் முஞ்சால்
இந்தியாவின் மிகப்பெரிய இரு சக்கரவாகன தயாரிப்பு நிறுவனமான ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனரான சுனில் கந்த் முஞ்சால் தலைமையில் 2017ஆம் ஆண்டில் அதிகப்படியான விற்பனை இலக்குகளை அடைந்தது மூலம் தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு இந்நிறுவனம் பயணித்து வருகிறது.
இந்நிலையில் 2017ஆம் ஆண்டில் 54.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
பவன் முஞ்சால்
ஹீரோமோட்டோ கார்ப் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான இருக்கும் பவன் முஞ்சால் இந்த வருடம் 57.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
ஏ.எம்.நாயக்
இந்தியாவில் மிகப்பெரிய சுரங்கம் மற்றும் கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஏ.எம்.நாயக் பதவிக்காலம் முடிந்து 2017இல் வெளியேறினார்.
எல் அண்ட் டி குரூப்-இன் நிர்வாகத் தலைவராக இருந்த ஏ.எம்.நாயக் 2017இல் சுமார் 66.1 கோடி ரூபாய் அளவிலான சம்பளத்தைப் பெற்றுள்ளார்.
காவேரி கலாநிதி மாறன்
இந்தியாவின் முன்னணி மீடியா நிறுவனங்களில் ஒன்றான சன் குரூப் தென் இந்தியாவில் மிகப்பெரிய அளவிலான ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனராக விளங்கும் காவேரி கலாநிதி மாறன் 2017இல் 71.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
கலாநிதி மாறன்
சன் குரூப் நிறுவனத்தின் மற்றொரு தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் மட்டும் அல்லாமல் இந்நிறுவனத்தைத் துவங்கி இன்று இந்தியா முழுவதும் வர்த்தகம் செய்யும் அளவிற்குச் சன் குரூப்-இன் வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் கலாநிதி மாறன்.
இதன் மனைவி மற்றும் சக நிர்வாகத் தலைவர் காவேரி கலாநிதி மாறன் போலவே 2017இல் இவரும் 71.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
அகில் குப்தா
ஏர்டெல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான பார்தி இன்பராடெல் லிமிடெட் நிறுவனத்தின் தலைவராக இருக்கும் அகில் குப்தா 2017ஆம் ஆண்டில் 84.4 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்றுள்ளார்.
வினித் நாயர்
டெக் மஹிந்திராவின் சீஇஓ சி.பி.குருஞானி வருடத்தில் 45.2 கோடி ரூபாய் சம்பளம் பெறும் நிலையில், இந்நிறுவனத்தின் நிர்வாகத் துணை தலைவரான (Executive Vice Chairman) 2017ஆம் ஆண்டில் சுமார் 179.5 கோடி ரூபாயை சம்பளமாகப் பெற்று டாப் 10 பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications