இந்தியாவில் தற்போது ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்துள்ளது, குறிப்பிகாக மெட்ரோபோலியன் நகரங்களில் அதன் ஆதிக்கம் சற்று அதிகமாகவே உள்ளது. இதுமட்டும் அல்லாமல் முதலீடு நிறுவனங்களும் தற்போது அதிகளவில் முதலீடு செய்வதும் ஸ்டார்ட்அப்களில் தான்.
இதற்கு முக்கியக் காரணம், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான லாபமும், வளர்ச்சியும் அடையும் என்பதே.
இந்நிலையில் கர்நாடக அரசு ஸ்டாட்அப் நிறுவனங்களால் ஈர்க்கப்பட்டு இம்மாநிலத்தில் அதிகளவிலான வேவைலாய்ப்பு மற்றும் வர்த்தகத்தை ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வாயிலாக உருவாக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் கர்நாடக மாநில அரசு நேரடியாக முதலீடு செய்ய முதலீடு செய்துள்ளது.
ஸ்டார்அப் நிறுவனங்கள்
இந்தியா முழுவதும் தினந்தோறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கிய வண்ணம் உள்ளது, ஆனால் இவர்களுக்கு இருக்கும் முக்கியமான பிரச்சனை என்னவென்றால் பணம் தான். இதனைக் கண்டறிந்த கர்நாடக அரசு இம்மாநிலத்தில் பதிவு செய்யப்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்வதற்காகத் தனிப்பட்ட முறையில் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளது.
டெக் நிறுவனங்கள்
முதல்கட்டமாகக் கர்நாடக அரசு டெக் துறையைச் சார்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய முடிவு செய்தது. இந்த முதலீட்டுக்காகக் கர்நாடக அரசைத் தொழிலதிபர்கள் அணுகலாம் என இம்மாநில ஐடி அமைச்சர் பிரியாங் கார்கே தெரிவித்தார்.
300 கோடி ரூபாய்
2015ஆம் ஆண்டுக் கர்நாடக அரசு ஸ்டார்ட்அ பாலிசியைக் கொண்டு வந்தது, இதன் வாயிலாக டெக் துறையைச் சார்ந்துள்ள நிறுவனங்களில் மட்டும் முதலீடு செய்ய 300 கோடி ரூபாய் அளவிலான நிதியை ஒதுக்கீடு செய்து முதலீடு செய்யப்பட்டுள்ளது.
3 பிரிவில் மட்டுமே
பயோடெக்னாலஜி, சுற்றுலா மற்றும் அனிமேஷன் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்களில் மட்டும் இந்தத் தொகையை முதலீடு செய்துள்ளதாகவும் இம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
கர்நாடக மாநிலம்
இதுவரை டெக் துறையில் மட்டும் கர்நாடகாவில் சுமார் 7,909 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் துவங்கப்பட்டுள்ளது. இதுவே மகாராஷ்டிராவில் இதன் எண்ணிக்கை 8,117ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
5,000 நிறுவனங்கள்
2015இல் கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப்பட்ட ஸ்டார்ட்அ பாலிசியின் கீழ் சுமார் 5,000 நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2017ஆம் ஆண்டில் மட்டும் இந்த 300 கோடி ரூபாயை சுமார் 250க்கும் அதிகமான நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கார்கே தெரிவித்துள்ளார்.
அடுத்தப் பகுதி
ஸ்டார்ட்அ பாலிசி 5 ஆண்டுத் திட்டம் என்பதால் அடுத்தச் சுற்று முதலீடுகள் குறித்த அறிவிப்பு இன்னமும் வெளியாகவில்லை, இந்த முறை கூடுதல் முதலீடு அறிவிக்க அதிகளவிலான வாய்ப்புகள் உள்ளது.
இலக்கு
2020ஆம் ஆண்டுக்குள் சுமார் 20,000 ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் இம்மாநிலத்தில் உருவாக்க வேண்டும் என்ற இலக்குடன் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக 6 லட்சம்பேருக்கு நேரடியாகவும், 12 லட்சம் பேருக்கு மறைமுகமாகவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் மூலம் வேலைவாய்ப்பு உருவாக்கப்பட உள்ளது.
யூனிகான் நிறுவனங்கள்
இந்தியாவில் வெற்றி அடைந்த பிளிப்கார்ட், ஓலா, மு சிக்மா, இன்மொபி மற்றும் குவிக்கர் ஆகிய பல ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் கர்நாடக மாநிலத்தை மையமாகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்கவும், அதன் மூலம் வேலைவாய்ப்புகளை உருவாக்கத் திட்டமிடும் மாநிலங்கள் கர்நாடகாவை முன்மாதிரியாக எடுத்துக்கொள்ளலாம்.
தமிழ்நாடு
தொழில்துறை வளர்ச்சிக்கு இந்தியாவிற்கு உதாரணமாகத் திகழும் தமிழ்நாட்டின் இன்றைய நிலை என்ன தெரியுமா..?
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?



Click it and Unblock the Notifications