ஏர் இந்தியா நிறுவனத்தினை விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ள அதே நேரம் செலவுகளைக் குறைக்கும் பணியிலும் இறங்கியுள்ளது. இதன் முதற்கட்டமாக வேறு பணிகளில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு ஏர் இந்தியாவில் பணி செய்து வரும் ஒப்பந்த தொழிலாளர்கள் 400 நபர்களை ஏர் இந்தியா நிறுவனம் பணியை விட்டு நீக்கியுள்ளது.
இந்தப் பணி நீக்கத்தில் சிக்கிய ஊழியர்கள் அனைவரும் தொழில்நுட்ப பிரிவைச் சாராதவர்கள் என ஏர் இந்தியா நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான பிரதீப் சிங் கரோலா தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம் ஆகஸ்ட் மாதம் ஏற்கனவே உள்ள ஒப்பந்த தொழிலாளர்களை நீக்கிவிட்டுப் புதிதாக ஓய்வுபெற்ற ஊழியர்களைப் பணிக்கும் எடுக்கவும் ஒப்பந்தங்களைப் போட்டது.
விற்க அனுமதி
2017-ம் ஆண்டு மத்திய அமைச்சகம் ஏர் இந்தியா நிறுவனத்தில் உள்ள அரசின் பங்குகளை விற்க அனுமதி அளித்தது.
பணி நீக்கம்
அதன் ஒரு கட்டமாக ஏர் இந்தியா நிறுவத்தின் நிர்வாக இயக்குனர் தொழில்நுட்ப பிரிவு இல்லாத மற்றும் தொழில்நுட்ப பிரிவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஒப்பந்த ஊழியர்களினை உடனடியாகப் பணியைவிட்டு நீக்கி ஜனவரி 5-ம் தேதி உத்தரவிட்டுள்ளது.
யாருக்குப் பாதிப்பில்லை
முக்கியமான பிரிவில் பணி செய்யும் ஒப்பந்த ஊழியர்களை நீக்கவில்லை என்றாலும், ஏன் அவர்களை நீக்கவில்லை என்று முறையான காரணத்தினைச் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் கூற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
ஊழியர்கள் எண்ணிக்கை
இது குறித்துத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திற்குக் கிடைத்துள்ள தகவலின் படி 412 ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு ஒப்பந்த தொழிலாளர்களாகப் பணி செய்து வருவதாகவும் அவர்கள் அனைவரும் நீக்கப்படலாம் என்று தெரியவந்துள்ளது.
துணை நிறுவனங்கள்
இந்த ஊழியர்கள் எண்ணிக்கையானது ஏர் இந்தியாவின் துணை நிறுவனங்களான ஏர் இந்தியா ஏர் திராஸ்போர்ட் சேவைகள், ஏர் இந்தியா சார்ட்டர்ஸ் லிமிடெட், ஏர் லைன் அலைடு சேவைகள் மற்றும் ஏர் இந்தியா எஞ்சினியரிங் லிமிடெட் ஆகிய நிறுவனங்களிலும் சேர்த்து எனத் தெரியவந்துள்ளது.
உத்தரவு
ஏர் இந்தியா நிறுவனத்தின் முன்னால் தலைவரான ராஜிவ் பன்சால் சென்ற ஆகஸ்ட் மாதம் புதிதாக ஓய்வுபெற்றவர்களைத் தற்காலிகமாகப் பணிக்கு எடுப்பதைத் தற்போதைக்கு நிறுத்தி வைக்குமாறு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications