2017ஆம் நிதியாண்டின் முதல் 9 மாத காலத்தில் மட்டும் மத்திய அரசின் நேரடி வரி வருவாய் 18.2 சதவீதம் வரையில் உயர்ந்து 6.56 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. நடப்பு நிதியாண்டில் நேரடி வரி வசூல் அளவை 9.80 லட்சம் கோடி ரூபாயை இலக்காக நிர்ணயம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நேரடி வரி வசூல்
தற்போது வசூலான 6.56 லட்சம் கோடி ரூபாய் கடந்த வருடத்தை விடவும் 18.2 சதவீதம் அதிகமாகும். நேரடி வரி வருவாய் என்பது தனிநபர் வருமான வரி மற்றும் கார்பரேட் வரி ஆகியவை கொண்டது.
மொத்த வரி
2017ஆம் ஆண்டின் ஏப்ரல் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் மட்டும் மொத்த வரி வசூல் அளவு 7.68 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது, இது கடந்த வருடத்தை விடவும் 12 சதவீதம் அதிகமாகும்.
அட்வான்ஸ் வரி
இதில் 1.12 லட்சம் கோடி ரூபாய் ரீபண்டாகக் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இக்காலகட்டத்தில் 3.18 லட்சம் கோடி ரூபாய் அட்வான்ஸ் வரியாக மத்திய அரசு வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உயர்வு
மேலும் இக்காலகட்டத்தில் அட்வான்ஸ் வரியின் கீழ் கார்பரேட் வரி வசூல் 10.9 சதவீதமும், தனிநபர் வரி வசூல் 21.6 சதவீதமும் அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications