இந்தியாவின் மிகப் பெரிய தனியார் விமானப் போக்குவரத்து நிறுவனமான இண்டிகோ குறிப்பிட்ட வழித்தடங்களில் மட்டும் 899 ரூபாய்க்கு விமான டிக்கெட்களை அறிவித்துள்ளது.
இண்டிகோ நிறுவனத்தின் இந்த அதிரடி சலுகையில் 2018 ஜனவரி 10-க்குள் பிப்ரவரி 1 முதல் 2018 ஏப்ரல் 15 இடையிலான பயணங்களுக்கு டிக்கெட் புக் செய்து குறைந்த விலையில் விமானப் பயணம் செய்ய முடியும்.
899 ரூபாய் சலுகை
டெல்லியில் இருந்து சண்டிகர் செல்ல goindigo.in என்ற இணையதளத்தில் 899 ரூபாயில் டிக்கெட் கிடைக்கும் என்று இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது.
999 ரூபாய் டிக்கெட்
அதே நேரம் டெல்லியில் இருந்து ஜெய்ப்பூர் செல்ல 999 ரூபாய் டிக்கெட் கட்டணம் என்று இணையதளத்தில் இண்டிகோ நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
பிற வழித்தடங்கள்
டெல்லியில் இருந்து அம்ரிஸ்டர் செல்ல 1,009 ரூபாய் முதல் விமான டிக்கெட்டும், டெல்லியில் இருந்து டேராடூன் செல்ல 1,299 ரூபாய் விமான டிக்கெட் என்றும், டெல்லியில் இருந்து நாக்பூர் செல்ல 1,399 ரூபாய் விமான டிக்கெட் எனவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
உதான் திட்டம்
சலுகை விலையில் விமான டிக்கெட் அளிப்பது மட்டும் இல்லாமல் 500 கிமி அல்லது 1 மணி நேர விமானப் பயணங்களுக்கு 2,500 ரூபாய் என்ற விலையில் மத்திய அரசின் உதான் திட்டத்தின் கீழ் இண்டிகோ நிறுவனம் விமானப் பயணங்களை அளிக்கிறது
வருவாய்
சென்ற காலாண்டில் இண்டிகோ நிறுவனத்திற்கு 294% வரை நிகர லாபம் அதிகரித்து 551.55 கோடி ரூபாய் பெற்றதாகவும், இது காலகட்டத்தில் சென்ற ஆண்டு 139.85 கோடி ரூபாய் மட்டுமே நிகர லாபம் பெற்று இருந்ததாகவும் அறிவித்துள்ளது. இந்திய விமானப் போக்குவரத்துச் சந்தையில் 38 சதவீதம் வரை இண்டிகோ நிறுவனம் வசம் உள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications