அமேசான், பிளிப்கார்ட் உடன் கூட்டு சேரும் பாபா ராம்தேவ்..!

எப்எம்ஜிசி மற்றும் நுகர்வோர் சந்தையைப் புரட்டிபோட்ட பாபா ராம்தேவ்-இன் பதஞ்சலி நிறுவனம் தனது விற்பனை அளவை அதிகரிக்க ஈகாமர்ஸ் சந்தையில் இறங்கத் திட்டமிட்டுள்ளது.

மிகவும் குறைந்த காலகட்டத்தில் அதிகளவிலான கடைகளைத் திறந்து இந்தியா முழுவதும் தனது தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி எப்எம்ஜிசி துறையில் மிகப்பெரிய வளர்ச்சியைப் பதஞ்சலி நிறுவனம் அடைந்துள்ளது.

இந்நிலையில் தனது வர்த்தகத்தை அடுத்தகட்டத்திற்கு, அதாவது இன்றைய தலைமுறையினர் மற்றும் மேல் தட்ட மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் விதமாக இம்முயற்சியில் இறங்க உள்ளது பதஞ்சலி.

டிவிட்டர்

டிவிட்டர்

பதஞ்சலி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் எஸ்கே டிஜாராவாலா தனது டிவிட்டர் கணக்கில், "பதஞ்சலி நிறுவனம்ம தற்போது மிகப்பெரிய ஆன்லைன் திட்டத்தைப் பணியாற்றி வருகிறது, இதுமட்டும் அல்லாமல் உலகின் மிகப்பெரிய ஈகாமர்ஸ் நிறுவனத்துடன் விரைவில் ஒப்பந்தம் செய்ய உள்ளோம். பதஞ்சலியின் புதிய அத்தியாயம் இனி நாட்டின் முன்னணி ஈகாமர்ஸ் துறையின் வாயிலாகத் துவங்குகிறது" எனத் தெரிவித்தார்.

 3 நிறுவனங்கள்

3 நிறுவனங்கள்

ஈகாமர்ஸ் சந்தையில் இறங்க உள்ளதாகத் திட்டமிட்டுள்ளது பதஞ்சலி நிறுவனத்தின் சொந்த விற்பனை தளமான patanjaliayurved.net உடன் அமேசான், பிளிப்கார்ட், பேடிஎம் மால் ஆகிய நிறுவனங்களுடன் கூட்டணி வைக்க உள்ளது.

துவக்கம்

துவக்கம்

முன்னணி ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ள பதஞ்சலி நிறுவனம் ஜனவரி 16ஆம் தேதியன்று மிகப்பெரிய அறிவிப்புடன் இப்புதிய திட்டத்தைச் செயல்படுத்த முடிவு செய்துள்ளது.

 முக்கியப் பிரிவுகள்

முக்கியப் பிரிவுகள்

ஈகாமர்ஸ் நிறுவனங்களுடன் கூட்டணி அமைத்துள்ள பதஞ்சலி, உணவு முதல் ஆடை பிரிவு வரையில் அனைத்து முக்கியப் பிரிவுகளிலும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்ய உள்ளது. இதுமட்டும் அல்லாமல் குழந்தைகள், டையப்பர் மற்றும் நேப்கின்ஸ், சோலார் பொருட்கள் என மாறுபட்ட பிரிவிலும் தனது வர்த்தகத்தைத் துவங்க உள்ளது.

ரீடைல் நிறுவனங்கள்

ரீடைல் நிறுவனங்கள்

பதஞ்சலி நிறுவனம் இந்தியா முழுவதும் சிறு கடைகள் மற்றும் மெகாமார்ட்களை வைத்திருந்தாலும், பிக்பஜார் மற்றும் ரிலையன்ஸ் ரீடைல் ஆகிய நிறுவனங்களுடனும் கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+