இந்தியாவில் வர்த்தகம் செய்ய விரும்பும் சிங்கிள் பிராண்டு ரீடைல் விற்பனையாளர்கள், தயாரிப்பாளர்கள் இனி எந்தொரு இந்திய நிறுவனத்தையும் கூட்டணி இல்லாமல் 100 சதவீதம் வரையில் அன்னிய முதலீடு செய்து வர்த்தகம் செய்யலாம்.
நேரடி அன்னிய முதலீடு
இன்று நாடாளுமன்ற கூட்டத்தில் அன்னிய முதலீடு விதிமுறைகள் மற்றும் அளவீடுகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது, அப்போது மத்திய அரசின் நேரடி அன்னிய முதலீடு குறித்து முக்கியமான கோரிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
100 சதவீத முதலீடு
இதில் சிங்கிள் பிராண்டு ரீடைல் பிரிவில் ஆட்டோமேடிக் முறையில் 100 சதவீதம் வரை அன்னிய முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது இப்பிரிவில் அதிகப்படியாக 49 சதவீதம் மட்டுமே அன்னிய முதலீடு செய்ய முடியும். அதற்கு மேல் முதலீடு செய்ய வேண்டுமெனில் மத்திய அரசின் ஒப்புதல் தேவை. இனி அரசின் ஒப்புதல் இல்லாமல் 100 சதவீதம் வரையில் நேரடியாக முதலீடு செய்யலாம்.
ஏர் இந்தியா
இதேபோல் வெளிநாட்டு ஏர்லையன்ஸ் நிறுவனம் இந்தியன் ஏர்லையன்ஸ் நிறுவனத்தில் 49 சதவீதம் வரையில் முதலீடு செய்யவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏர் இந்தியா தற்போது அதிகளவிலான பங்குகளை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கட்டுமான மேம்பாடு
அதேபோல் கட்டுமான வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையிலும் வெளிநாட்டு நிறுவனங்கள் 100 சதவீதம் வரையில் முதலீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications