பிரதமர் மோடி அரசின் மிகப்பெரிய திட்டமாகப் பார்க்கப்படும் ஸ்மார்ட்சிட்டி திட்டம் அறிவிக்கப்பட்ட போது இந்தியா முழுவதும் படிப்படியாக அடுத்த 10 வருடத்தில் அமெரிக்கா, ஐரோப்பிய வல்லரசு நாடுகளைப் போல் மாறிவிடும் என அனைவராலும் நம்பப்படும் வகையில் இத்திட்டம் பேசப்பட்டது.
இத்திடம் அறிவிக்கப்பட்டு இரண்டரை வருடம் முழுமையாக முடிந்துள்ள நிலையில், இத்திட்டத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி என்ன தெரியுமா..?
100 ஸ்மார்ட்சிட்டி
இந்தியா முழுவதும் 100 ஸ்மார்ட்சிட்டிகளை அமைப்பது என்று மிகப் பிரம்மாண்டமாக முறையில் அறிவிக்கப்பட்ட இத்திட்டம், இந்தியா முழுவதும் 3 சுற்றுகளில் ஸ்மார்ட்சிட்டியாக மாற்ற வேண்டும் என 90 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக 1.91 லட்சம் கோடி ரூபாய் அளவிலான தொகை 90 நகரங்களின் வளர்ச்சிக்குப் பயன்படுத்த நிதி ஒதுக்கீடு செய்தது மத்திய அரசு.
5 ஆண்டுத் திட்டம்
ஸ்மார்ட்சிட்டி திட்டம் என்பது 5 ஆண்டுத் திட்டம், 2015-16 முதல் 2019-20ஆம் ஆண்டு வரையிலான காலத்திற்கு ஒவ்வொரு நிதியாண்டிற்கும் சுமார் 500 கோடி ரூபாய் அளவிலான தொகையைச் செலவு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது.
2.5 வருடம்
ஆனால் இந்த இரண்டரை வருடத்தில் அறிவிக்கப்பட்டு 1.91 லட்சம் கோடி ரூபாயில் இருந்து வெறும் 1.4 சதவீதம் மட்டுமே இந்த 2.5 வருடத்தில் செலவு செய்துள்ளது. மேலும் மொத்த திட்டத்தில் 5.2 சதவீதம் மட்டுமே முடிவடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
72 சதவீத திட்டங்கள்
தேர்வு செய்யப்பட்ட 90 நகரங்களில் அறிவிக்கப்பட்ட சுமார் 72 சதவீத திட்டங்கள் இன்னமும் திட்ட வடிவ அறிக்கையைத் தயாரிப்பதிலேயே உள்ளது.
இதில் டெல்லியில் 23 திட்டங்கள், வாரனாசியில் 16 திட்டங்கள், ராய்பூரில் 10 திட்டங்கள் என 90 நகரங்களில் அதிகத் திட்டங்கள் பெற்று இந்த 3 நகரங்கள் தான்.
ஹர்தீப் சிங் பூரி
ஆனால் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகத்தின் அறிக்கையில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி வெளியிட்ட அறிக்கையில், 1,35,459 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் பல்வேறு நிலையில் உள்ளதாகவும், 1,872 கோடி ரூபாய் மதிப்பிலான 147 திட்டங்கள் முடிவடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications