இந்தியாவின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி மற்றும் ஹோண்டா நிறுவனங்கள் ஸ்டீல் பொன்ற முக்கிய மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பால் 32,000 ரூபாய் வரை கார்களின் விலையினை உயர்த்தியுள்ளன.
மாருதி சுசூசி
மாருதி சுசூசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இதன் வாகனங்களின் விலையில் 1,700 ரூபாய் முதல் 17,000 ரூபாய் வரை மாடல்களைப் பொருத்து உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.
ஹோண்டா
இதே போன்று ஹோண்டா இந்தியா பிரிவின் செய்தி தொடர்பாளரும் ஜனவரி 8ம் தேதி முதல் இந்தியாவில் உற்பத்தி செய்யும் மாடல் கார்களின் விலையினை உயர்த்தியுள்ளதாகத் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்துடன் பகிர்ந்துகொண்டார்.
ஹோண்டா நிறுவன கார்கள் குறைந்தபட்சம் 6,000 ரூபாய் முதல் 32,000 ரூபாய் வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் அக்கார்டு ஹைபிர்ட் கார்கள் விலையில் மாற்றம் ஏதும் இல்லை.
டாடா மோட்டார்ஸ்
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தங்களது கார்களின் விலையினை 25,000 ரூபாய் வரை ஜனவரி 1 முதல் உயர்த்தியுள்ளது.
ஃபோர்டு
ஃபோர்டு நிறுவனமும் தங்களது இந்திய தாயாரிப்பு கார்களின் விலையினை 4 சதவீதம் வரை விலை உயர்த்தியுள்ளது.
பிற நிறுவனங்கள்
பிற கார் நிறுவனங்களான ஹூண்டாய் இந்தியா, மகேந்திரா, ஸ்கோடா, இசுசூ மற்றும் ரெனால்ட் உள்ளிட்ட நிறுவனங்களும் தங்களது கார்களின் விலையினை விரைவில் மாற்றி அமைக்கும் என்று கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications