இந்திய வர்த்தக உலகில் மறக்க முடியாத சத்யம் கம்பியூட்டர்ஸ் சர்வீசஸ் நிறுவனத்தின் கணக்கு மோசடியில் உலகின் முன்னணி தணிக்கை நிறுவனமான பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது என்பது தற்போது சத்யம் நிறுவனத்தின் தலைவர் மற்றும் ஊழியர்கள் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது..
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம்
இதன் காரணமாக அடுத்த இரண்டு வருடத்திற்குப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட்டுள்ள எந்தொரு நிறுவனத்திற்கும் தணிக்கை செய்யக் கூடாது எனச் சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செபி தெரிவித்துள்ளது.
2 வருட தடை
அடுத்த 2 வருடங்களுக்குப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பெயரில் எந்த ஒரு நிறுவனமும், அமைப்பும், தணிக்கையாளரும் பட்டியலிடப்பட்ட நிறுவனத்திற்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்கக் கூடாது எனச் செபி அமைத்தின் தலைவர் ஜி.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.
தடை
பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பார்ட்னர்ஸாக எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோர் சத்யம் நிறுவத்துடன் 8 வருடம் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதாவது ஊழல் குறித்த செய்து வெளியான ஜனவரி 2009 வரையில் இந்நிறுவனத்திற்காகப் பணியாற்றி இருந்தனர்.
இந்நிலையில் எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோர் 3 வருடங்களுக்குத் தணிக்கை சான்றிதழ் அளிக்கத் தடையும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பணம்
2000-08ஆம் ஆண்டு வரையில் சத்யம் நிறுவனத்திற்குத் தணிக்கை செய்தற்காகச் சுமார் 23. கோடி ரூபாயை கட்டணமாகப் பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனம் பெற்றுள்ளது, இதில் 13.09 கோடி ரூபாய் எஸ் கோபாலகிருஷணன் மற்றும் ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோருக்குக் கொடுக்கப்பட்டுள்ளது.
அபராதம்
இந்நிலையில் 13.09 கோடி ரூபாயை ஜனவரி 7,2009 முதல் வருடத்திற்கு 12 சதவீத வட்டியுடன் சேர்ந்து செபியிடம் அபராதம் செலுத்துமாறு, பிரைஸ் வாட்டர்ஹவுஸ் நிறுவனத்தின் பெங்களூரு அலுவலகம், எஸ் கோபாலகிருஷணன், ஸ்ரீநிவாஸ் தாலூரி ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

முதலிடத்தில் விஜய், இரண்டாமிடத்தில் ஸ்டாலின் – அப்போ எடப்பாடி பழனிசாமி , சீமான்?

அண்டார்டிகாவில் மறைந்து கிடக்கும் தங்கப் புதையல்!! இந்த நாடுகளுக்கெல்லாம் ஜாக்பாட்!!



Click it and Unblock the Notifications