நாட்டின் முன்னணி மென்பொருள் நிறுவனங்களில் ஒன்றான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் டிசம்பர் உடன் முடிந்த காலாண்டில் 1.3 சதவீதம் அதிகமான லாபத்தைப் பெற்றுள்ளது. இதன் மூலம் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 6,531 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
லாபம்
2017ஆம் நிதியாண்டின் செப்டம்பர் 30 உடன் முடிந்த காலாண்டில் டிசிஎஸ் நிறுவனம் 6,446 கோடி ரூபாய் அளவிலான லாபத்தைப் பெற்று இருந்து குறிப்பிடத்தக்கது.
இதன் மூலம் டிசம்பர் காலாண்டில் லாபத்தில் 1.3 சதவீதம் உயர்வைப் பதிவு செய்துள்ளது.
வருவாய்
டிசம்பர் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 1.32 சதவீதம் வரையில் அதிகரித்து 31,774 கோடி ரூபாய் அளவிலான உயர்வைச் சந்தித்துள்ளது.
ஈவுத்தொகை
டிசம்பர் காலாண்டில் டிசிஎஸ் நிர்வாகம் தனது முதலீட்டாளர்களுக்கு ஒரு பங்கிற்குச் சுமார் 7 ரூபாய் அளவிலான ஈவுத்தொகையை அளித்துள்ளது.
50 மில்லியன் டாலர்
டிசம்பர் காலாண்டில் தான் டிசிஎஸ் நிறுவனம் இந்த ஆண்டில் முதல் 50 மில்லியன் டாலர் அளவிலான ஆர்டரில் கையெழுத்திட்டுள்ளது.
2017ஆம் ஆண்டு
டிசம்பர் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுப் பேசிய டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ராஜேஷ் கோபிநாத், 2017ஆம் டிசிஎஸ் நிறுவனத்திற்குச் சிறப்பானதாக அமையும் என்று கூறினார்.


Click it and Unblock the Notifications