பெங்களூரு: இந்தியாவின் இரண்டாம் மிகப் பெரிய ஐடி நிறுவனமான இன்ஃபோசிஸ் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டிற்கான அறிக்கையினை இன்று வெளியிட்டது.

அதில் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் மூன்றாம் ஆண்டுக் காலாண்டு வருவாயானது 37.6 சதவீதம் உயர்ந்து 5,129 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது என்று அறிவித்துள்ளனர்.
இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் வருவாயானது ஒவ்வொரு காலாண்டு உயர்ந்துகொண்டே சென்று சராசரியாக 2017-ம் ஆண்டில் 38.3 சதவீத வளர்ச்சியினைப் பெற்றுள்ளது. இதுவே இன்ஃபோசிஸ் நிறுவனமானது செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த இரண்டாவது காலாண்டில் 3,726 கோடி ரூபாய் நிகர லாபத்தினைப் பெற்றுள்ளது.
டிசம்பர் மாதத்துடன் முடிவடைந்த மூன்றாம் காலாண்டில் இன்ஃபோசிஸ் நிறுவனம் 17,794 கோடி ரூபாய் வருவாயினைப் பெற்றுள்ளது. நவம்பர் மாதம் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளைத் திரும்பப் பெற்றதன் வழியாக மூலதனம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று நிர்வாக இயக்குநரான ரங்கநாத் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications