மும்பை: என்ன முகேஷ் அம்பானி கிரிப்டோ கரன்ஸி வெளியிடுகிறார், இவரின் அடுத்தத் திட்டம் இது தான் என்ற தகவல்கள் இணையத்தில் பவனி வந்துகொண்டு இருக்கின்றன.
நமக்குத் தற்போது கிடைத்துள்ள தகவலின் படி ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் கீழ் ஜியோ காயின் என்ற கிரிப்டோ கரன்சியினை வெளியிட இருப்பதாகத் தெரிய வந்தது.
ஆகாஷ் அம்பானி
அது மட்டும் இல்லாமல் அம்பானியின் மூத்த மகன் அகாஷ் தலைமையில் இதற்காக 50 உறுப்பினர்கள் கொண்ட குழு ஒன்று கிரிப்டோ கரன்ஸி பிளாக் செயின் தொழில்நுட்பத்தினை ஆராய்ந்து வருகின்றனர் என்றும் கூறப்படுகிறது.
தென் கொரியா
தென் கொரியா உள்ளிட்ட சில நாடுகள் பிட் காயினைத் தடை செய்த பிறகு அதன் மதிப்பு பல மடங்கு சரிந்த நேரத்தில் ஜியோ காயின் பற்றிய செய்திகள் வெளியாகியுள்ளது.
பிட்காயின்
பிட்காயினின் மதிப்பு இன்று 13,601 டாலராக உள்ளது. இதுவே சில வாரங்களுக்கு முன்பு கிட்டத்தட்ட 20,000 டாலர்கள் வரை உயர்ந்து இருந்தது. பிட்காயின் மட்டும் இல்லாமல் ரிப்பல் உள்ளிட்ட காயினை மதிப்புகளும் 4 சதவீதத்திற்கும் கூடுதலாகச் சரிந்துள்ளன.
உலக அரசுகள்
உலகம் முழுவதும் உள்ள அரசுகள் பிட்காயின் பாதுகாப்புக் குறித்துத் தங்களது அச்சத்தினைத் தெரிவித்து வந்தாலும் தனிநபர்கள் இதில் முதலீடு செய்வது என்பது அதிகரித்துக்கொண்டே வருகிறது.
இந்தியா
இந்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி பிட்காயின் முதலீடு என்பது தனிநபரின் சொந்த ரிஸ்க். இதற்கு அரசுக்கு எந்தத் தொடர்பும் கிடையாது, சட்டத்திற்கு உட்பட்டதல்ல என்று பல முறை கூறியுள்ளார்.
லக்ஷ்மி காயின்
லக்ஷ்மி என்ற பெயரில் ஆர்பிஐ வங்கியும் கிரிப்டோ கரன்சி வெளியிடுவதாகக் கூறியது. ஆனால் அதில் பெரிதாக எந்த முன்னேற்றமும் இல்லை.
ஜியோ காயின்
ஜியோவை பொருத்த வரையில் ஜியோ காயின் முயற்சிகள் என்பது துவக்க நிலையில் உள்ளதால் தற்போது இது குறித்து எந்த அறிவிப்பினையும் வெளியிடவில்லை, கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications