நேப்பால் அரசு இந்திய நிறுவனங்களுடன் இருந்து நீண்ட காலமாகப் பெற்றுவந்த இணையதளச் சேவையில் இருந்து வெளியேறி சீனாவுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
நேப்பால் அரசு நிறுவனமான நேப்பால் டெல்காம் நிறுவனம் சீன டெலிகாம் குளோபல் உடன் இணைந்து இணையதளச் சேவை வழங்க பேண்டுவித்களைப் பெற்று வெள்ளிக்கிழமை முதல் இந்திய சேவைகளிடம் இருந்து வெளியேறியுள்ளது.
நேப்பால் டெலிகாம்
இந்திய நிறுவனங்களுக்கு மாற்றாகப் பெறப்படும் இந்தச் சீன சேவையின் மூலமாகத் தடையில்லா இணையதளச் சேவையினை அளிக்க முடியும் என்று நேப்பால் டெலிகாம் நிறுவனம் முடிவு செய்துள்ளது.
இந்திய நிறுவனங்கள்
பத்து வருடங்களுக்கு மேலாக இந்திய டெலிகாம் நிறுவனங்களான ஏர்டெல் மற்றும் டாடா கம்யுனிகேஷன் நிறுவனங்களுடன் இணைந்து நேப்பால் டெலிகாம் நிறுவனம் இமாலய பகுதிகளில் இணையதளச் சேவையினை வழங்கி வருகிறது.
மோசமான சேவை
இந்தியாவிடம் இருந்து பெற்ற வந்த இணையதளச் சேவையானது மிக மோசமாக இருந்ததாகவும், அடிக்கடி சேவை துண்டிக்கப்பட்டு வந்ததாகவும் இதுவே அவர்கள் சீனாவுடன் கைகோர்த்ததற்கான காரணம் என்றும் தெரியவந்துள்ளது.
என்ன சிக்கல்
இந்தியாவிற்கு இது வருவாய் மட்டும் இல்லாமல் அண்டை நாடுகளின் இடையில் இருந்த நட்புறவில் இழப்பு ஏற்பட்டுள்ளதின் ஒரு உதாரணம் இது என்றும் கூறப்படுகிறது.
ஆய்வு முடிவு
அன்மையில் உலகளவில் நடைபெற்ற இணைய வேகம் குறித்த வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட ஆய்வு முடிவில் இந்தியாவின் இணைய வேகமானது மிகவும் குறைவு என்று தெரியவந்துள்ளது.
அதிகக் கட்டணம்
இணையதளச் சேவை வழங்குநர்கள் தாங்குள் பெறும் தொகையினை விட மிகக் குறைந்த கட்டணத்திற்கான சேவையினைத் தான் வாடிக்கையாளர்களுக்கு வழங்கி வருகின்றனர் என்று தெரியவந்துள்ளது.


Click it and Unblock the Notifications