இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்து வரும் அதே வேலையில் டிசிஎஸ் நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு வியாழக்கிழமை ஆச்சரியத்தினை அளித்துள்ளது.
இந்தியாவின் மிகப் பெரிய ஐடி நிறுவனம் என்று அழைக்கப்படும் டிசிஎஸ் இந்திய பேரோல் கீழ் வரும் ஊழியர்களுக்கு டிசம்பர் காலாண்டில் 100 சதவீதம் வேரியபல் பே அளிக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளது.
முதல் முறை அல்ல
டிசிஎஸ் நிறுவனத்தில் சில பிரிவுகளில் மட்டும் ஜூனியர் மற்றும் நடுத் தர ஊழியர்களுக்கு முழுமையாக வேரியபல் பே கிடைத்து வந்தது. சில நேரங்களில் செலவுகள் குறைந்த அதிக லாபம் கிடைத்திருக்கும் போது 100 சதவீத வேரியபல் பே கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
வேரியபல் பே எப்படி வழங்கப்படுகிறது?
வேரியபல் பே என்பது ஊழியர்களின் திறன் வணிகப் பிரிவு போன்றவற்றை வைத்து வழங்குவதாக டிசிஎஸ் நிறுவனத்தின் சரவதேச மனிதவள நிர்வாகியான அஜ்யோந்திரா முக்கர்ஜி தெரிவித்தார். இதே போன்று முன்பும் ஊழியர்களுக்கு வேரியபல் பே அளிக்கப்பட்டதாகத் தெரிவித்த இவர் அது குறித்த விவரங்களை அளிக்க மறுத்துவிட்டார்.
இந்திய ஊழியர்களுக்கு மட்டும்
டிசிஎஸ் ஊழியர்கள் 3 ம் காலாண்டில் மிகச் சிறந்த திறனை அளித்துள்ளனர் அதன் ஒருகட்டமாகவே இந்த வேரியபல் பே அளிப்பது என்றும் ஆனால் இதில் இந்தியாவிற்கு வெளியில் பணி செய்யும் ஊழியர்கள் சேர்க்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
ஐடி நிறுவனங்கள்
இந்தியாவின் பிற ஐடி நிறுவனங்கள் குறைந்த அளவில் வருவாய் ஈட்டி வரும் நிலையில் வாடிக்கையாளர்களும் சமுக வலைத்தளங்கள், மொபல் சாதனங்கள், கிளவுட் கம்ப்யூட்டிங் சேவைகளுக்கு மாறிவருகின்றனர்.
ஊழியர்களின் எண்ணிக்கை
மறு பக்கம் ஐடி நிறுவனங்கள் ஆட்டோமேஷன், ரோபோடிக்ஸ், செயற்கை நுண்ணறிவு போன்றவற்றால் ஊழியர்களின் எண்ணிக்கையையும் குறைத்து வருகின்றன.


Click it and Unblock the Notifications