உஷார்.. 9 மாதத்தில் இந்த துறையில் மட்டும் 90,000 நபர்களின் வேலைவாய்ப்பு பறிபோக வாய்ப்பு..!

மும்பை: ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்து பறந்து வந்த டெலிகாம் துறையில் ஒவ்வொரு நாளும் ஊழியர்களின் எண்ணிக்கையானது குறைந்துகொண்டே வருகிறது.

இது குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவலின் படி 80,000 முதல் 90,000 ஊழியர்கள் வரி அடுத்து 9 மாதத்தில் டெலிகாம் துறையில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தெரியவந்துள்ளது.

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரிப்பு

போட்டி அதிகரித்து, விலை குறைக்கப்பட்டு லாபமும் சரிந்துள்ளதால் செலவுகளைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் டெலிகான் நிறுவனங்கள் தள்ளப்பட்டுள்ளன. அதன் ஒருகட்டமாக ஊழியர்களை நிறுவனங்கள் குறைத்து வருகின்றன சியல் எச்ஆர் சர்வீசஸ் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அறிக்கை

அறிக்கை

இந்த அறிக்கையானது 65 டெலிகாம் மற்றும் டெலிகாம் நிறுவனங்களுக்கு மென்பொருள் மற்றும் வன்பொருள் அளிக்கும் நிறுவனங்களிடம் இருந்து 100 மூத்த மற்றும் நடத்தர ஊழியர்களிடம் இருந்து பெறப்பட்டுள்ள தகவலை வைத்துத் தயாரிக்கப்பட்டுள்ளது.

பணி நீக்கம்

பணி நீக்கம்

சென்ற வருடம் மட்டும் டெலிகாம் துறையில் 40,000 நபர்களின் வேலை வாய்ப்புப் பறிபோனது என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். அதுமட்டும் இல்லாமல் அடுத்த 6 முதல் 9 மாதத்தில் 80,000 முதல் 90,000 ஊழியர்களுக்கு வேலைப் போய்விடும் என்றும் கூறுகின்றனர்.

துறை வல்லுநர்கள்

துறை வல்லுநர்கள்

டெலிகாம் துறையினைப் பொருத்த வரையில் அடுத்த 2 முதல் 3 காலாண்டுகள் வரை அதிக ஊழியர்கள் பணி நீக்கம் நடைபெற வாய்ப்புள்ளதாகப் பெங்களூரை சேர்ந்த ஒரு டெலிகாம் நிறுவனத்தின் மூத்த அதிகாரி நம்முடன் பகிர்ந்துக்கொண்டார்.

காரணங்கள்

காரணங்கள்

தங்கள் பணிபுரியும் நிறுவனம் என்ன செய்யப்போகின்றதோ என்ற கவலையில் ஊழியர்கள் உள்ளனர். அதிகப்படியான கடன் மற்றும் வருவாய் குறைவு போன்ற காரணங்களால் டெலிகாம் நிறுவனங்களில் ஊழியர்கள் பணி நீக்கம் என்பது தவிர்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

பிற துறைகளுடன் ஒப்பிடும் போது ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு அளிப்பது குறைந்துள்ளது. சென்ற ஆண்டு டெலிகாம் துறையில் 69 சதவீத ஊழியர்கள் 7 சதவீத சம்பள உயர்வு, மீதம் உள்ளவர்கள் 5 சதவீதம் வரையிலும் மட்டுமே ஊதிய உயர்வு பெற்ற நிலையில் இந்த அண்டு அதுவும் இருக்காது என்று கூறுகின்றனர்.

வேலை வாய்ப்பு

வேலை வாய்ப்பு

ஊழியர்களைப் பணி நீக்கம் செய்வது மட்டும் இல்லாமல் புதிதாக வேலைக்கு ஊழியர்களை எடுக்க வாய்ப்புகள் மிகவும் குறைவாக உள்ளதாகவும், மிக முக்கியமாக ஊழியர்கள் தேவை என்றால் மட்டுமே வேலை வாய்ப்பு கிடைக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறுகின்றனர். ஆனால் சில ஆண்டுகளுக்கு முன்பு வரை ஐடி நிறுவனங்களுக்குப் போட்டியாய் டெலிகாம் நிறுவனங்கள் ஊழியர்களைப் பணிக்கு எடுத்து வந்தன.

ஊழியர்கள் நிலை

ஊழியர்கள் நிலை

புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்கும் முன்பே 25 சதவீத ஊழியர்களின் வேலை வாய்ப்புகள் பறிபோய்விடும் என்றும் அதில் 65 சதவீதத்தினர் வேறு துறை சார்ந்த பணிகளில் சேருவார்கள் என்றும் பிறர் நிலை என்ன என்பது தெரியவில்லை என்றும் கூறுகின்றனர்.

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+